"ஓரிடமே நின்று ஒற்றைக்காலில் தவம்
எளிமை,அமைதி,காத்திருப்பு
மரங்களிடம்
கற்கவேண்டியதே ஏராளமிருக்க
மரத்தடியில் ஏன் நடக்கின்றன
பாட வகுப்புகள்?" (பக்:104) உள்ளிட்ட கவிதைகள்.
சிறுவயது முதல் தற்போது உட்காரும் கட்டில் வரை தான் பார்த்த மரங்களுக்கு பழகிய மரங்களுக்கு சுமார் 115 க்கும் வரைந்த கவிதைகளின் தொகுப்பு.
அகிரா மியாவாகி என்பவரைப்பின்பற்றி பலதரப்பட்ட மரக்கன்றுகளையும் ஒரே தளத்தில் நட்டதைப் பின்பற்றி, நெய்வேலி NLCIL ல் இரண்டாம் அனல் மின்நிலையத்தில் மின்குறுங்காடு அமைத்துள்ளனர் என்பதையும் நினைவுகூர்கிறார்.
ஆளுக்கொரு மரக்கன்று நட்டால்தான் எதிர்காலம் காற்று பெறும் என உரத்துப்பேசும் மர நேசம் மிக்க கவிதைகள்.
***

No comments:
Post a Comment