நீயே உன் கவிதை உன் கனவு
அன்பான வாசகருக்கு வணக்கம். கவிதை அனுபவங்களால் கவிதையைப் பற்றியே ஒரு தொகுப்பு அமைந்தால் எப்படி இருக்கும்? ஆம்.
கணையாழியில் சுஜாதா மூலமாக அறிமுகமாகி (அதே நவம்பர் மாதத்தில் அமரர்.பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழிலும் என் கவிதை பிரசுரமானது) 1993 லிருந்து 33 ஆண்டுகளாக நவீன கவிதைகள் எழுதி வரும் எனது 64 வது நூலே மேலே கண்ட கேள்வியின் பதில்.
இளம் கவிஞர்களுக்கான தடம் ஒன்றை சுட்டிக் காட்டுகிறது. அழுத்தமாகப் பதிவு செய்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவை கவிதை பாடும் கவிதைகள்.
எழுதும் ஒருவர் அடையும் உணர்வுகள், சமூகப் பார்வைகள் என யாவும் எழுதியுள்ளேன். சமூக பொருளாதார சுமைகள் கூட, கவிஞனுக்கு வேறுவிதத்தில் அமைவதையும் சுட்டியுள்ளேன்.
இந்நூலினை ஒருவர் வாசிக்கும்போது, அவர் அக மன உணர்வுகளின் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்கும்.

No comments:
Post a Comment