Wednesday, 2 September 2026

முல்லா கதைகள்: 8

 முல்லா கதைகள்: 8 ( posted on 2.9.26)

************


யாருக்கு மதிப்பு?

************** 

ஒரு நாள் முல்லாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அவரிடம், “ முல்லா, இன்று ஒரு நாள் உங்கள் கழுதையை இரவல் தந்தால், இன்று மாலையே திருப்பித் தருகிறேன்” என்று கேட்டார்.

முல்லா, தம்முடைய கழுதையை அவருக்கு இரவல் கொடுக்க விரும்பவில்லை . “ முன்பே எனது கழுதையை வேறொரு நண்பருக்கு இரவல் தந்துவிட்டேன்” என்று சொன்னார்.

வந்திருந்த நண்பர் கிள்ம்பியபோது , வீட்டின் பின் பக்கமிருந்த முல்லாவின் கழுதை கத்தியதால், “ முல்லா! உள்ளே கழுதை கத்தும் சத்தம் கேட்கிறதே” என்று முல்லாவைக் கேட்டார்.

“ பொய் பேசி மாட்டிக்கொண்டோமே என்று தவிக்காமல், நண்பரைப் பார்த்து, “ ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல், ஒரு கழிதையின் வார்த்தையை நம்பும் உங்களுக்கு என் கழுதையை இரவல் பெறும் தகுதி கிடையாது” என்று மிகுந்த சினத்துடன் கூறிக்கொண்டே கதவை சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டார்.


நீதி: ஒருவரிடம் ஒன்றை இரவல் பெறுவது அத்தனை எளிதல்ல.  


**