நட
காற்றை நோக்கி நட
உடனே கிடைக்காது தான்
ஆனாலும் நட
எதிர் வீட்டான்
பக்கத்து வீட்டான்
கழிவறைகள்
பூனை வரிசை
மாடுகள் நிற்றல்
தொழு நோயாளி பார்வை
செவி துளைக்கும் முதிர் கிழத்தனம் பேச்சு அடர்த்தி
யாவையும் தாண்டி விடை பெற்று நடக்கப் பழகு
கிட்டலாம் ஒரு வேளை சிலீரெனக் குளிர்ந்து
மார்கழித் தன்மையுடன்
இளம் வெயிலால் சலவை செய்யப்பட்ட காற்று
நீ மறுமலர்ச்சி அடைய மறுமுனையில்
காத்துக் கிடக்கலாம்
எழுந்த எண்ணம் அதனை நிறுத்தாமல் போ
கிளம்பு
காற்றுடன் கல
No comments:
Post a Comment