Wednesday, 30 September 2026

அதிகாரம் - சமரசம்

 அதிகாரம் - சமரசம்

*********************


ஒரு முட்டை கூட 

தன்னளவில் நிர்பந்தம் கொண்ட அதிகாரம் செய்கிறது

அருகருகே இருக்க வேண்டும் 

ஆனால் கலந்து விடக் கூடாது என்று

வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும்

மிரட்டி வைக்கிறது

பிறகு அது மனிதர்கள் வாய்க்குள் 

அழைத்துச் செல்லப்படுகிறது

அவ்வளவு அமைதியான சமரசத்துடன்

மற்றும் முணுமுணுப்பின் ஓசை துளியுமின்றி.


- பா.சத்தியமோகன்


நீரின்றி அமையாது உலகு

 நீரின்றி அமையாது உலகு 

*********************************

அன்றிலிருந்து இந்த வினாடி வரைக்கும் நீரின் அருமை உணர வைக்க நம் முன்னோர் பாடுபட்டனர். கரிகால் சோழன் காவிரி ஆற்று நீர் தேக்கியதால் பாசனப் பரப்பு அதிகமானது. விளை நிலங்கள் நெல்மூட்டைகள் குவியல் குவியலாக விளைந்தன. அறுவடையாகி விளைந்த நெல் கட்டுகளில் இருந்து நெல் மணிகளை உதிர்க்க மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போரடித்த சோழ நாடு என்று தமிழகத்தின் பெருமை பகன்ற காலம் ஒன்று இருந்தது.

சொட்டு நீர்ப்பாசனம் என்று நீர்ச் சிக்கனம் போதிக்கும் காலமும் வந்தது. குடிநீர் பாட்டில்களில் தஞ்சம் புகுந்தது. காய்ந்த ஏரி, குளங்களில் வீடுகள் நிரம்பியதால், மழைக்காலத்தில் வெள்ளகாலத்தில் வீடுகள் மிதக்க ஆரம்பிக்கின்றன.

Water management துறையைச் சார்ந்த ஒன்றுதான், வீட்டுக்கு வீடு மழை  நீர் சேகரிப்புத் தொட்டி வைத்தல் திட்டம்.

 விவசாயம் சார்ந்த படிப்புகளை , கால் நடை குறித்த கல்வியினை அலட்சியம் செய்கிறோம். தொடர்ந்து அலட்சியம் செய்துவிட்டு, நம் இளைய தலைமுறை வெறும் காற்றில் இட்லி சுட்டு உண்ணப் போகிறதா? தானியங்கள் விளைவதில் அக்கறை ஒவ்வொரு மனிதனின் மறைமுகப் பொறுப்பல்லவா? எல்லோருமே பொறியியல் படிப்பு படித்தாலும் படிக்கும்போது ஏற்படும் பசிக்கு விவசாயம் வேண்டும். உற்பத்தி வேண்டும்.ஒரு ஐந்து வருடங்களுக்கு பொறியியல் படிப்பை நிறுத்தி,விவசாய விஞ்ஞானம் பெருக்குவோம்.

புங்க மரம் ஆக்ஸிஜன் சேகரம் அதிகம் செய்யும். பல் வேறுபட்ட நிறைய விதைகளை  ஒரே உருண்டையாகப் பிசைந்து பேருந்தின் ஜன்னல் வழியாக வீசிக்கொண்டே வரும் நண்பர்களை நான் அறிவேன்.  

அந்த விதைகள் எங்கோ விழுந்து எவ்வாறேனும் முளைக்கும் என ஏங்கும் விதைப்பாளர்களுக்காக -

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று எழுதிய அவ்வையார் தமிழுக்காக -

இந்த தமிழ் நிலத்தை ரசாயன மாசு படாத குடிநீர் வேண்டும் என்று பாடுபடும் இயற்கை ஆர்வலர்களுக்காக -

அறம் செய்ய விரும்பும் பனை மரங்களின் வேரிலிருந்து வானிலிருந்து பொழிந்துகொண்டிருக்கிறது மழை.

மழை பொழிக. மழை புராணம் பெருகுக. மனமெலாம் நனைக. 


Monday, 28 September 2026

ரோபாட் காலமா? கைத்துணிகளின் காலமா?

 ரோபாட் காலமா? கைத்துணிகளின் காலமா?  


மேற்காசியப் போரினால் ஈரானை வீழ்த்தத் துடிக்கும் போரினால், அமைதிப் பூங்காவான இந்தியாவின் வளர்ச்சிக்கு சமையல் எரிவாயு உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நமது சமையல் கட்டு வரைக்கும் வந்துள்ளது. 

அது கூட பரவாயில்லை. 

“இன்னும் பத்தாண்டுகளில் மனிதனை ரோபாட்டுகள் வென்றுவிடும்” என்கிறார் எலான் மாஸ்க். அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். இது தவிர சீனாவும் ரோபோட்டுகளை போர்ச் சூழலில் மட்டுமல்ல சாப்பாடு விநியோகமான ஸ்விக்கி ஆட்கள் சேவையிலும் பயன் படுத்த முயற்சி செய்கிறது.

நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  இளைஞர்களுக்கு  ஏ.ஐ. தொழில்நுட்பமே எதிர்காலம் எனும் பேச்சில் நாம் கவனம் கொள்ளும் போது, சாமான்ய மக்கள் மிரண்டுபோய் யோசிக்கிறார்கள்.

தள்ளுவண்டியில் சட்டை புடவைகளை இஸ்திரி போடுபவர் ஒரு ரோபோவுடன் போட்டி போட்டு சலவை செய்யும் பலம் உள்ளவரா? காய்கறி விற்பவர்? கிடையவே கிடையாது.

மக்கள் தொகை பெருகியதால் சமூகத்தின் பல தட்டுகளில் ரோபோவை நுழைக்க முற்படும் விஞ்ஞான அவசரம் வந்துவிட்டது. ஏற்கெனவே வாஷிங் மெஷின் வந்தபின்பு கையால் துவைப்பதை மறந்து, கைத்துணிகளின் காலத்தைத் தவறவிட்டோம்.

செல்போன் வந்தபின்பு பத்து எண்களை நினைவு ஆற்றல் கொள்வதையும் தவறவிட்டவர்கள்தானே நாம்? 

கவிதை உணர்வுகளிலும் ரோபோட்டுகள் நுழைய வாய்ப்பு உள்ளது. ஒன்றுமட்டும் உறுதி. எந்த ஒரு காலத்திலும் ரோபோட்டுகளை விட மனித அறிவே மேம்பட்டுத் திகழும். முழுக்க முழுக்க ஒரு ரோபோட்டினால் ஒரு செல்போனால் நமது எல்லாக் காரியத்தையும் கவனிக்க முடியும் என்ற நிலைக்கு வந்தோம் என்றால் நமது அழிவு அந்த வினாடியே ஆரம்பம் என்று பொருள்.

ஏன்? முழுக்க முழுக்க விஞ்ஞான ரோபோக்கள் கட்டுப்பாடு ஏற்பட்டால், மனிதாபிமானம் கேள்விக்குறியாகும் என்றார் மகாத்மா.

ஆம்.மனிதாபிமானமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம். 

நமது மனித சமூகத்தின் பதில் என்னவாக இருக்கப் போகிறது?

வெல்லப் போவது கைத்துணிகளின் காலமா?  ரோபோட்டுகளின் காலமா?

அனைவருக்கும் சிந்தனாசக்தி ஏற்பட்டு ஞானம் ஏற்பட அன்னை லலிதாம்பிகை அருள் செய்க. விஞ்ஞானத்தை மனசாட்சியும் அன்பும் கட்டுக்குள் வைக்கட்டும்.


அன்பிலே வாழ்த்திலே

பா.சத்தியமோகன்


முல்லா கதைகள்: 13

 முல்லா கதைகள்: 13

********************************



கருப்பு உடைக்குக் காரணம்



முல்லா ஒரு சமயம் துக்கத்தைத் தெரிவிக்கும் கருப்பு அங்கியை அணிந்து வீதி வழியே சென்று கொண்டிருந்ததை கண்ட தோழர் ஒருவர் கவலையுடன் “முல்லா ஏன் கருப்பு உடை அணிந்துள்ளீர்கள்? யாரேனும் இறந்து விட்டார்களா?” என்று வினவினார்.

அதற்கு முல்லா “யாரேனும் இறந்திருந்து எனக்கு அதை அறிவிக்காமல் இருந்தால் என்ன செய்வது? அதற்காக முன் எச்சரிக்கையாக இந்த ஆடை அணிந்து கொண்டேன்” என்று பதில் சொன்னார்.

மறுநாள் முல்லா வீட்டுக் கோழிக்குஞ்சுகள் கழுத்தில் கருப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு தெருவில் திரிவதைக் கண்ட எதிர் வீட்டுக்காரன் “முல்லா ஏன் உங்கள் வீட்டுக் கோழிக்குஞ்சுகள் கருப்பு ரிப்பனைச் சுற்றிக் கொண்டு திரிகின்றன?” என்று முல்லாவைக் கேட்டான்.

அதற்கு முல்லா “இன்று காலை கோழிக்குஞ்சுகள் தங்கள் தாயை இழந்து விட்டன. என் மனைவி இவற்றின் தாயைக் கொன்று சூப்பு வைத்து விட்டாள். எனவே தாயை இழந்த கோழிக்குஞ்சுகள் தங்களுடைய துக்கத்தைத் தெரிவிப்பதற்காகக் கருப்பு ரிப்பன் அணிந்துள்ளன” என்று விளக்கினார்.


நீதி: செய்யப் போகிற அநீதியை குற்றம் சொல்லாதிருக்க முன் கூட்டியே சிலர் அது சம்பந்தமான சில செயல்களை இரக்கம்போல காட்டிச் செயல்படுத்துவார்கள்.


***


Wednesday, 23 September 2026

முல்லா கதைகள்:12

 முல்லா கதைகள்:12

*********************


ஆபத்தும் பிரார்த்தனையும்

********************



ஒரு சமயம் முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கப்பல் திசை தவறி எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. கப்பலில் உள்ள எல்லோரும் உணவும் நீரும் தீர்ந்து விட்டதால் பசியாலும் தாகத்தாலும் இறக்கும் நிலையை அடைந்தனர்.

கப்பலில் உள்ள பிரயாணிகளெல்லோரும் முழந்தாளிட்டு இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டனர். கப்பலை ஏதேனும் ஒரு நாட்டில் சேர்த்துத் தங்கள் உயிரைக் காப்பாற்றினால் தாங்கள் செலுத்தும் காணிக்கைகளையும் செய்யப் போகும் தரும செயல்களையும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பயம் அதிகரிக்க அதிகரிக்க பட்டியலும் நீண்டுக் கொண்டே போனது.

ஒரு பிரயாணி “என் சொத்து எல்லாவற்றையும் ஏழைகளுக்கே தந்து விடுகிறேன்” என்றும் சொன்னார்.

உடனே முல்லா அவர்களைப் பார்த்து “பிரயாணிகளே! சுயபுத்தியுடன் பிரார்த்தனைகளைச் செய்யுங்கள். நீங்கள் எல்லோரும் உயிர் பிழைக்கவே மாட்டோம் என்ற நம்பிக்கையில்தான் நிறைய தான தருமங்கள் செய்வதாகக் கூறுகிறீர்கள். அதோ கிழக்குத் திக்கில் ஒரு தீவு தெரிகிறது” என்று சொன்னார்.

அவ்வளவு தான்! தாங்கள் செய்யப் போகும் பிரார்த்தனைகளைப் பற்றி கூறிய பிரயாணிகள் எல்லோரும் தங்கள் வாயை மூடிக் கொண்டனர்.


***




Friday, 11 September 2026

முல்லா கதைகள்: 11

 முல்லா கதைகள்: 11


எடுத்தவர் தர வேண்டுமே

*******************


ஒரு சமயம் விலையுயர்ந்த ஐம்பது பொற்காசுகள் மதிப்புள்ள முல்லாவின் தலைப்பாகை ஒன்று கடைவீதியில் காணாமல் போய்விட்டது.

முல்லாவின் நண்பர் ஒருவர் “முல்லா! தொலைந்து போன தலைப்பாகையைத் தேடிக் கண்டு பிடிக்க முயற்சி எடுக்கவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு முல்லா “முயற்சி எடுக்காமல் இருப்பேனா? என் தலைப்பாகையைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு பொற்காசு பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளேன்” என்று சொன்னார்.

அதைக் கேட்ட நண்பர் “ஐம்பது பொற்காசுகள் மதிப்புள்ள தலைப்பாகையைக் கண்டுபிடிப்பவன் ஒரு பொற்காசுக்காக உங்களிடம் தலைப்பாகையைத் திருப்பிக் கொடுப்பானா? விலை உயர்ந்த தலைப்பாகையை அவனே வைத்துக் கொள்ளலாம் அல்லவா?” என்று தனக்கு ஏற்பட்ட ஐயத்தைக் கூறினார்.

நண்பர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட முல்லா “தோழரே! உமக்கு ஏற்பட்ட ஐயம் எனக்கும் ஏற்பட்டதால், காணாமல் போன தலைப்பாகை மிகவும் பழையது. கிழிந்து போனது என்று அறிவித்துள்ளேனே” என்று சொன்னார்.


நீதி: மனித மனங்கள் பொருள் பற்றிலிருந்து வெளியே வருவதில்லை, மீண்டும் பொருள் கிடைக்க என்ன விதமான பொய்யும் சொல்பவை மனித மனங்கள்.

**


Thursday, 10 September 2026

ஆசான்” என்ற ஒரு நூல்

 ஆசான்” என்ற ஒரு நூல்

**************

கோபால கிருஷ்ண கோகலே வாழ்க்கை வரலாறு பற்றி; 63  ஆங்கில நூல்களை ஆராய்ந்து திரட்டி 476 பக்கங்களில் ; தில்லி தேசிய அருங்காட்சி இயக்குநர் உதவி உட்பட பலருக்கு நன்றி கூறும் “ஆசான்”  படித்துக்கொண்டிருக்கிறேன். நண்பர் என். சொக்கன் எழுதிய இந்நூலில் நடை மிகவும்  கவர்கிறது.

“நீங்கள் யார் மீதாவது மதிப்பு வைத்திருந்தால் அந்த மதிப்பை வெளிப்படையாக செயலில் காட்டுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உள்ளத்தில் இருக்கிற மதிப்பும் குறைந்துவிடும்” ( பக்கம்:30) என்பதை இளைஞர்களுக்கு அறிவுறுத்தியது உண்டு.


முல்லா கதைகள்: 10

 முல்லா கதைகள்: 10

****************

இருட்டில் எப்படித் தெரியும்?

********************


ஒரு சமயம் முல்லா தம் நண்பர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்று நேரம் போனதே தெரியாமல் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அறையில் இருள் சூழ்ந்து விட்டது.

உடனே நண்பர் முல்லாவிடம் “முல்லா அறையில் இருள் பரவி விட்டதால் உங்கள் வலது பக்கத்தில் இருக்கும் மெழுகுவர்த்தியை எடுத்துக் கொடுங்கள். அதை ஏற்றி வைப்போம்” என்று சொன்னார்.

அதற்கு முல்லா “முட்டாள்! முட்டாள்! அ¨றையில் இருள் பரவியிருக்கும் போது இந்த இருளில் எது வலது பக்கம் எது இடது பக்கம் என்று எனக்கு எப்படித் தெரியும். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே?” என்று சினத்துடன் நண்பரைக் கேட்டார்.


நீதி: துன்பம் எனும் இருள் சூழ்வதால் சொந்த அறிவும் போய்விடும் என்று நினைத்து அந்தத் துன்பத்தை விட்டு வெளியே வர முயற்சி செய்யாமல் பிறரையும் சிலர் ஏசுகிறார்கள்.


முல்லா : 9

 சூரியனை விட சந்திரனே மேல்

**************************************

ஒரு சமயம் முல்லா மாணவர்கள் புடைசூழ அமர்ந்து அற்புதமான பெரிய பெரிய உண்மைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

முல்லா சொல்லும் அற்புதமான உண்மைகளை கேட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.

முல்லா மாணவர்களைப் பார்த்து “சூரியனை விடச் சந்திரனே மிகுந்த பயன் கொடுக்கிறான்” என்று கூறினார். அதைக் கேட்ட மாணவர்களில் ஒருவன் “எப்படி?” என்று கேட்டான்.

அதற்கு முல்லா “இரவு நேரத்தில் தான் நமக்கு வெளிச்சம் வேண்டும். அவ்வெளிச்சத்தைக் கொடுப்பவன் சந்திரன் தானே!” என்று மாணவர்களிடம் சொன்னார்.

முல்லா சொன்னதைக் கேட்ட மாணவர்கள் குருவின் கண்டுபிடிப்பைப் போற்றி புகழ்ந்தார்கள்.

நீதி: சூரியன் ஒருபோதும் மறைவதில்லை பூமி சுழல்வதால் இரவு பகல் உண்டாகிறது என்ற உண்மையெல்லாம் சுய புத்தியால் ஆராயும் தன்மையற்று எது பேசினாலும் ஏற்றுக்கொள்ளும் சில மாணவர்கள்  இருக்கிறார்கள்.

**


Wednesday, 9 September 2026

ஆம் ! அப்படி ஒரு அரச காலம் இருந்தது

 ஆம் ! அப்படி ஒரு அரச காலம் இருந்தது

***************************

அரசன் என்பவன் தமிழறிவு பெற்றவனாக அக்காலத்தில் இருந்தார்கள். வறுமையில் வாடும் புலவன் தனது நிலையைச் சூசகமாகத்தான் சொல்வான் என்பதும் அறிந்திருந்தார்கள். தொண்டை நாடு (காஞ்சியில்) வாழ்ந்த இராமச் சந்திர  கவிராயர் பாடிய பாடல் இதனை சித்திர கவி என்பார்கள்:-

“இரவலனே உனக்கு இல்லாதது என்ன?”

“இதயம்” என்ன?

“பர உணவு” எது?

“சுவையற்றது” என்ன? 

“ சொல்பான்மை என்ன?”

தர உரை என்றால் அதற்கு ஒன்றும் சாற்றிலேன் நான்

“வர திரு வேங்கட நாதா!” என்றேன்

பொன் வழங்கினனே!”


விளக்கம்:-

அதாவது அரசன் என்னை ஐந்து கேள்விகள் கேட்டான். நான் வேறு எதுவும் சாற்றவில்லை.

“திருவேங்கடநாதா” என்ற ஒற்றைச் சொல்லைக் கூறினேன். அரசன் கேட்ட ஐந்து வினாக்களுக்கும் அந்த ஒரே வார்த்தை விடையாக அமைந்தது. அரசன் உடனே பொன் வழங்குகினான்.


வினா                                                        விடை

1) உனக்கு இல்லாதது என்ன?                   திரு - செல்வம்

2) இதயம் என்ன?                                   வேம்- வேகும் ( வருந்தும்)

3) உணவு எது?                                     கடன்: கடன் பட்ட பொருள் 

4) சுவை அற்றது என்ன?                          நா - நாக்கு

5) சொல்பான்மை என்ன?                      தா - தருவாய் .


Wednesday, 2 September 2026

முல்லா கதைகள்: 8

 முல்லா கதைகள்: 8 ( posted on 2.9.26)

************


யாருக்கு மதிப்பு?

************** 

ஒரு நாள் முல்லாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அவரிடம், “ முல்லா, இன்று ஒரு நாள் உங்கள் கழுதையை இரவல் தந்தால், இன்று மாலையே திருப்பித் தருகிறேன்” என்று கேட்டார்.

முல்லா, தம்முடைய கழுதையை அவருக்கு இரவல் கொடுக்க விரும்பவில்லை . “ முன்பே எனது கழுதையை வேறொரு நண்பருக்கு இரவல் தந்துவிட்டேன்” என்று சொன்னார்.

வந்திருந்த நண்பர் கிள்ம்பியபோது , வீட்டின் பின் பக்கமிருந்த முல்லாவின் கழுதை கத்தியதால், “ முல்லா! உள்ளே கழுதை கத்தும் சத்தம் கேட்கிறதே” என்று முல்லாவைக் கேட்டார்.

“ பொய் பேசி மாட்டிக்கொண்டோமே என்று தவிக்காமல், நண்பரைப் பார்த்து, “ ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல், ஒரு கழிதையின் வார்த்தையை நம்பும் உங்களுக்கு என் கழுதையை இரவல் பெறும் தகுதி கிடையாது” என்று மிகுந்த சினத்துடன் கூறிக்கொண்டே கதவை சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டார்.


நீதி: ஒருவரிடம் ஒன்றை இரவல் பெறுவது அத்தனை எளிதல்ல.  


**  





Tuesday, 25 August 2026

முல்லா கதைகள்: 7

 முல்லா கதைகள்: 7  

***********

ஒரு சமயம் ஒருவர் முல்லாப் பார்த்து “ விதி என்பது என்ன?” என்று கேட்டார்.

“ நாம் எதிர்பார்ப்பதற்கு எதிராக நடப்பதுதான் விதி” என்றார் முல்லா.

அவர் சொன்ன பதில் புரியாததால் “கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்” என்று கேட்டார்.

“ ஒரு காரியம் வெற்றி அடையும் என எதிர்பார்த்து தோல்வி அடைந்தால் அதை விதி என்றும்; ஒரு காரியம் தோல்வி அடையும் என எதிர்பார்த்து வெற்றி அடைந்தால் அதனையும் விதி என்று சொல்கிறீர்கள்.. அதாவது எதிர்பார்த்தது நடைபெறவில்லை என்றால் நாம் தரும் பெயர் விதியாகும்”


நீதி:  முல்லாவின் விளக்கம் சரியே. மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற பாதைக்கு செல்வதில்லை. விதி மீது பழி போடுதல் எளிது.


>>> 

Sunday, 23 August 2026

முல்லா கதைகள்: 6

 முல்லா கதைகள்: 6 

*****************

மதிய வேளை. முல்லா ஆனந்தமாக ஓர் மல்பெரி மரத்தின் கீழே தங்கி இருந்தார். சற்று தொலைவில் தர்பூசனிக் கொடியில் பெரிய பெரிய தர்பூசனிப் பழங்கள் காய்த்திருப்பதைக் கண்டார். தான் நின்றிருந்த மல்பெரி மரத்தில் சிறிது சிறிதாய் பழங்கள் நிறைய இருப்பதையும் ஒப்பிட்டார்.

“ இந்த உறுதியான  பெரிய மரத்தில் சின்னஞ் சிறிய பழங்களையும்; அந்த மென்மையான கொடியில் பெரிய பெரிய பழங்களையும் ஆண்டவன் ஏன் வினோதமாகப் படைத்திருக்கிறான்?”

முல்லாவின் சிந்தனை முடியும் முன்னர். ஒரு ம்ல்பெரிப்பழம் முல்லாவின் மொட்டை தலையில் விழுந்து கீழே ஓடியது.

“ கடவுள் ஏன் இப்படிப் படைத்தான் என்று இப்போது புரிகிறது. இல்லாவிட்டால் என் தலை நொறுங்கியிருக்குமே” என்று சொல்லிக்கொண்டார் முல்லா.

நீதி: ஒவ்வொரு துன்பமும் அமைக்கப்பட்ட விதத்தில் அமைக்கப்பட்ட நேரத்தில் நம்மை  அணுகி துன்பம் கொடுத்தே தீரும். ஏற்றே ஆக வேண்டும். அதனை நாம் கேள்வி கேட்க முடிவதில்லை.


Thursday, 20 August 2026

முல்லா கதைகள்: 5

 முல்லா கதைகள்: 5

********

ஒரு சமயம் முல்லா ஒரு கல்யாண வீட்டுக்குச் சென்றார். கல்யாண வீட்டு வாசலில் தயங்கி இன்று “ காலில் உள்ள செருப்பை வெளியே விட்டு செல்வதா?” என்று யோசனை செய்தார்.

ஏற்கெனவே ஒரு கல்யாணவீட்டில் ஒரு ஜோடி செருப்பை இழந்த அனுபவத்தால் , இம்முறையும் ஒரு ஜோடி செருப்பை ; அதுவும் புதிய செருப்பை இழக்க  விரும்பவில்லை. அதனால் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, யாரும் பார்க்காத சமயம் தன் சட்டைக்குள் வைத்துக்கொண்டு கல்யாண வீட்டுக்குள் சென்றார்.

முல்லாவை வரவேற்ற கல்யாணவீட்டார், அவர் சட்டைப் பைக்குள் ஏதோ இருப்பதைக்கண்டு “அது என்ன”  என வினவினர். அதற்கு முல்லா “ஒரு புத்தகம்” என்று கூற; அவர்கள் “ என்ன புத்தகம்?” என்று வினவ அதற்கு முல்லா  “வேதாந்த புத்தகம்” என்று சொன்னார்.

“அந்த புத்தகத்தை எங்கு வாங்கினீர்கள்?” என்று அவர்கள் கேட்க “ செருப்புக்கடையில் வாங்கினேன்” என்று முல்லா பதில் சொல்ல கேட்டவர்கள் திகைத்தார்கள்!

நீதி: இந்தக்கதையிலும் புத்தகத்தை வாங்கும் ஆசைவயப்பட்டு தவறான கேள்வி கேட்கும் நம் வழக்கத்தை உணரலாம். “எங்கேஅந்தப் புத்தகத்தைக் காட்டுங்கள்?” என்ற கேள்வி கேட்டிருக்கலாம்.

இன்னொரு கோணமும் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. உலகியல் பொருள்களுக்கே நாம் பாதுகாப்பும் மரியாதையும் தருவதால் எவ்வளவு உயர்ந்த விஷயத்தையும் மட்டமான பொருள் பற்றுக்காக பொய் சொல்லப் பயன் படுத்தும் அற்ப குணம் நமக்கு இருக்கிறது என்பதற்கே “வேதாந்த புத்தகம்” என்ற சொல் இக்கதையில் உள்ளது.


Wednesday, 19 August 2026

வாசிப்பவர்களுக்கு ஒளவை சொன்ன மூன்று வேலைகள் என்ன?

  வாசிப்பவர்களுக்கு ஒளவை சொன்ன மூன்று வேலைகள் என்ன?

*********************************

நாம் வாசிக்க நிறைய நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் எப்படி வாசிக்க வேண்டும் என்பது ஒளவையார் சொல்லியிருக்கிறார். முக்கியமாக எழுதுவர்கள் ஓராமல்தான் (எந்தப்பக்கம் எப்படி என்று கவனம் குவித்து கூர்ந்து) எழுதுவதில்லை என்பதை அவர் தமக்கே ஒப்புக்கொள்வது ஒளவையே அவையடக்கம் கருதி குறிப்பிடும்போது இன்று எழுதுவோர் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள்!

எழுதுவோர் கதி இப்படி இருப்பதால், வாசிப்போருக்கு சில டிப்ஸ் அன்றே தந்த நம் ஒளவையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஓராது எழுதினேன் ஆயினும் ஒண்பொருளை

ஆராய்ந்து கொள்வது அறிவுடமை - சீராய்ந்து

குற்றம் களைந்து குறை பெய்து வாசித்தல்

கற்றறிந்த மாந்தர் கடன்.

நான் ஆராய்ந்து எழுதவில்லை. அறிந்தவற்றை எழுதினேன். ஆனாலும் நுட்பமான அர்த்தம்  எதுவென ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்தல் அறிவுடையோர் கடமை.

அதன் சிறப்பு ஆராய்ந்து குற்றம் குறைகளை நீக்கி, நான் கூறாதவற்றை இடத்திற்கேற்ப நிரப்பி ( fill) அமைத்துப் படியுங்கள். அதுவே கல்வியில் சிறந்த மனிதர்களின் பொறுப்பு.

ஒளவையார் , படிப்பவர்களுக்கு சொன்ன மூன்று வேலைகள் என்ன?.  எழுதுகிறவர்கள் அவர்கள் அறிந்ததை மட்டுமே எழுதி உள்ளார்கள் என்பது புரிந்துகொண்டு -

1) அதில் நுட்பம் எது என ஆராயும் வேலை வாசகனுக்கு உண்டு 

2) சிறப்பானது எது என ஆராயும் வேலையின்போது குற்றம் குறை இருக்கத்தான் செய்யும் ; அதனை நீக்கி விடுக.

3) கூறாதன நோக்கி குறிப்பு அறிந்து அதனை நீங்கள் உங்கள் அறிதல் கொண்டு இட்டு நிரப்பிக்கொள்க என்பதை “குறை பெய்து”  வாசித்தலும் வாசகனுக்கு உண்டு.அவனே கற்று அறிந்த மாந்தன்.

**


முல்லா கதைகள்: 4

 முல்லா கதைகள்: 4 

****************

முல்லா, தமது ஊரிலிருந்த பண்க்காரரிடம் போய் “ எனக்கு சிறிது பணம் தேவைப்படுகிறது, கொடுங்கள்' என்று கேட்டார்.

“ எதற்குப் பணம்?” என்று பணக்காரர் கேட்டார்.

“ ஒரு யானை வாங்கப் போகிறேன்” என்று முல்லா பதில் சொன்னார்.

அதற்கு அந்தப் பணக்காரர் , “ யானைக்கு தீனி போடுவதற்கே பணம் நிறைய வேண்டுமே? உங்களிடம் பணம் இல்லாதபோது யானையை எப்படிக் காப்பாற்றுவீர்கள்?” என்று கேட்டார்.

இதைக் கேட்டு கோபமுற்ற முல்லா “ நான் பணம் வாங்கத்தான் உங்களிடம் வந்தேனே தவிர அறிவுரை பெறுவதற்காக அல்ல”

நீதி:-

1) அறிவுரை தந்து முனையிலேயே முயற்சியைக் கிள்ளி எறிவோர் உலகில் அதிகம்.

2) பணம் இல்லாதவர்கள் ரோஷம் காட்டினால் பணம் கிடைப்பதில்லை.

** 


Monday, 17 August 2026

முல்லா கதைகள்: 3

  முல்லா கதைகள்: 3 

*****

கடமை பொது


ஒரு சமயம் முல்லா, கப்பலில் பயணம் செய்டதுகொண்டிருந்தபோது, புயல் திடீரென்று வீசியதால் கடல் கொந்தளித்தது.

“ கப்பல் எந்த நேரமும் கவிழ்ந்து விடலாம்” என்று கப்பல் தலைவன் உள்பட எல்லோரும் அஞ்சியதால் , உடனே மண்டியிட்டு “ ஆண்டவனே! எங்களுடைய கப்பலைக் காப்பாற்று” என்று இறைவனைத் தொழுதனர்.

முல்லா இந்தப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதைக் கண்ட கப்பல் தலைவன், “ முல்லா! சமயவாதியான தாங்கள் இந்தப் பிரார்த்னையில் கலந்து கொள்ளாமல்  ஒதுங்கி நிற்கலாமா?” என்று வினவினான்.

“ இது கப்பலைக் காப்பாற்ற வேண்டிய பிரார்த்தனை. கப்பலைக் காப்பாற்றவேண்டியது உங்கள் வேலை, உங்கள் கடமை. நான் கப்பலின் மாலுமி இல்லை. வெறும் பயணிதான். ஆகவே ,கப்பலைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இல்லை” என்று பதில் சொன்னார்,

***


நீதி:- ஒரு நாளில் 5000 விஷயங்களை சிக்கல்களை ஈரான் அமெரிக்க யுத்தம் முதல்;சாலை விபத்துகள், சட்ட மன்ற லைவ்; குஜராத் வெள்ளம்; தெருநாய்கள் பிரர்ச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; போதைப் பழக்க கொலைகள் உள்ளிட்ட  பலவற்றை நமது தொலைக்காட்சி நமக்குள் கண்கள் வழியாகப் போடுகிறது. அவற்றை நமதாக என்ணுகிறோம். நம்மை அறியாமல். நமது பங்கு ( role) என்ன, நாம் அதில் செய்ய என்ன உள்ளது? என்ற கேள்விகள் நாம் நம்மைக் கேட்பதில்லை. நாம் கவலைப் பட வேண்டியதில்லை. நாம் பயணிகள். பயணிகள் மட்டுமே.


***


முல்லா கதைகள் : 2

  முல்லா கதைகள்:2


2. கொள்ளைக் கூட்டத்தினரை ஓடச் செய்தேன்



ஒரு முறை முல்லா தனது வீர தீர சாகசம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நான் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பயங்கரமான கொள்ளைக் கூட்டத்தை பயந்து ஓடும்படி செய்திருக்கிறேன்” என்று பெருமை பேசிக்கொண்டார் முல்லா.

“நீங்கள் ஒரு ஆளாக எப்படி கொள்ளைக் கூட்டத்தினரை ஓடும்படி செய்தீர்கள்?” 

“  அது மிகவும் எளிது. கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டு நான் பயந்து ஒடினேன். அவர்கள் என்னைப் பிடிப்பதற்காக பின்னே ஓடி வந்தனர்” என்று சாதுர்யமாக கூறினார்.


நீதி: எப்படி பயந்து ஓடினார்கள்? என்று கேட்டிருக்க வேண்டும். தவறிப்போய் வேறு கேள்வி கேட்டது போல் இன்றும் இப்படிப்பட்ட தம்பட்டங்கள் சொல்லும்போது நாம் சரியான கேள்விகளைக் கேட்காமல் பயம் சம்பந்தமாகவே கேட்கிறோம்.


****


Thursday, 13 August 2026

உப்மா மரம் உண்டா தாத்தா? ( சிறார் கதைகள்)


வாட்ஸ் அப் பார்க்கும் குழந்தைகள் (seeing) மாறி; உணர்வு பகிரும் குழந்தைகள் (share) தேவைப்படுகிறது என்கிறார் நூலாசிரியர்.
"சின்னகுழந்தைங்க நாங்க உப்மா பிடிக்காம அப்டியே மண்ணுல வீசறோம். அது செடியா மரமா வளர்ந்தால் எல்லோரும் பசி ஆறலாமே தாத்தா? "
"கரும்பு சக்கை என்ன சேதி சொல்லுது? " உள்ளிட்ட குட்டி கதைகள்.
உப்மா மரம் உண்டா தாத்தா?
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு,
பக்:46+2
விலை: ரூ50/-
கழிவு: 20% உண்டு
G pay: 9698009614




திருப்பாவை சொர்க்கங்கள்

 ஆண்டாள் நாச்சியார் அன்பு மொழிந்த தமிழ்ப்பாசுரம் அனுபவிக்க மார்கழி வரையில் ஏன் காத்திருக்கவேண்டும் என்று அன்போடு கேட்கும் அழகிய நூல். 30 பாசுரங்களின் எளிய உரை. "தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய"என்ற பாசுர விளக்கம் உட்பட அனைத்தும் இனிது.

நூல்: திருப்பாவை சொர்க்கங்கள்
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக் :68
விலை:80/-
கழிவு:20% உண்டு.
G pay: 9698009614




நமது தொலையாவழியும் இரண்டு இட்லியும் (64 கட்டுரைகளில்)

 சிந்திக்க வேண்டியன குறித்து சிந்திக்காமல் இருப்பதை நமக்கு எவரேனும் உணர்த்தும்போது அந்த ஒரு நொடி நாம் நம் வசத்தில் இருப்பதில்லை.

அன்பின் நிலையான மாதவம்செய்ய மாட்டீரோ என வினவிய அருணகிரயார் அதைச் செய்யாவிட்டால் எனக்கென்ன என்ற கேள்விக்கு பதிலும் அளித்தார்.
நும்மைத் தேடி வரும்தொலையாவழிக்கு(மரணத்துக்கு) நீங்கள் வாழும்போதே பொதிசோறும் துணையும் தேடிக்கொள்க என்று சொன்னதோடு நிற்கவில்லை. தொலையாவழி வரும்முன் இலையாயினும், வெந்தது ஏதாகினும் வறியவர்க்கு தருக என்று வழியும் சொன்னார்.
இந்நூல் அருணகிரியார் வரிகளின் சாரத்தை 64 கட்டுரைகளில் பேசும்.





எம் சிவமே ( கவிதைகள்)

 

மனித சமூகத்தில் வாழ்ந்தாலும் மனிதர்களோடு நேர்ந்து அனுபவிக்கும் துரத்தல்கள்,வெறுப்புகள்,
உதாசீனம்,மறைமுகவிலகல்,ஆதரவின்மை உள்ளிட்ட அனைத்தையும் சிவப்பரிசாக நோக்கச்சொல்லி அதை அறிய விண்ணப்பம் வைக்கும் வரிகளை நூல் முழுதும் காண முடிகிறது.
எம்சிவமே
பா.சத்தியமோகன்
புஸ்தகா வெளியீடு
பக்:112+2
விலை:ரூ130/-
கழிவு:20% உண்டு.
G pay: 9698009614




விலையில்லா மொழி (கவிதைகள்)

விலையில்லா மொழி (கவிதைகள்)
******
வாழ்க்கை பல பெண்களுக்கு அலுவலகத்திலேயே தீர்வதான சூழல் இருப்பதை கேர்ஃப்ரீ சார்ந்து ஒரு கவிதை "காலம்" என்ற தலைப்பு உள்ளிட்ட பிற கவிதைகள்.
விலையில்லா மொழி(கவிதைகள்)
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:123
விலை: ரூ140/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614





ஒவ்வொரு சொட்டிலும் மழை( சிறுகதைகள்)

மழை என்றால் என்னப்பா என்று கேள்விகேட்கும் மகளுக்கு பல பதில்கள் அளித்தும் கேள்விகள் வளரும் கதையில் முடிவில் என்ன நடக்கிறது? எளிமையை விளக்கும் பெரிய சவாலை எடுத்துக் கொள்கிறார் பா.சத்தியமோகன்.
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
நூல்: ஒவ்வொரு சொட்டிலும் மழை
பக்:-114+2
விலை:130/-
கழிவு:- 20% உண்டு
G pay:9698009614





தன்னை அறிந்த கடல்

 

ம்:
Jayabaskaran22024ல் வெளியான கவிதைத் தொகுப்பில் வாழ்வின் விசாரணைகள் அதிகம் காணப்படுகிறது.
பக்:107 ல் ஒரு கவிதை. தலைப்பு: குதிரை
"கவசம் அவிழ்த்தேன் என்றுஉதறியது குதிரை.
கவசம் இனி தரியேன் என்று துள்ளியது குதிரை.
கவசம் இருந்த இடத்தில்
கவச வடிவில்
தழும்பு பெற்ற குதிரை .
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:120
விலை: 130/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614








உடலெங்கும் ஒரு சிறுமி


2023ல் வெளிவந்த கவிதைநூல். பள்ளிக்காலத்திலேயே திருமணமாகி , பெண்குழந்தை வளர்க்கும் ஒரு தாயின் மன தரிசனம், தாலி இருக்கும் பகுதி தவிர தன்னை ஓர் சிறுமியாகவே நினைக்கும் கவிதை உள்ளடக்கி பல தளங்கள் கொண்டவை.
நூல்: உடலெங்கும் ஒரு சிறுமி
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:153
விலை:170/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614




பறவைகளின் இசையமைப்பாளன்


கவிதை உணர்வு உள்ள ஒருவர் இழக்கமுடியாத கவிதைகளின் தொகுப்பு.
"மனச்சாலை அடியான் இவன்" என்ற கவிதையில் செல் சார்ஜரைப்பிரிந்த செல்போன் அடையும் துயரம் தான் அடைவதாக எழுதுகிறார் கவிஞர்.
நூல்:
பறவைகளின் இசையமைப்பாளன்
( கவிதைகள்/2023)
ஆசிரியர்: பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:146
விலை:170/-
கழிவு:20% உண்டு
G pay: 9698009614






பாரதியே தமிழ்


பாரதியை தியானிப்பது போன்ற உணர்வு தரும் எளிய 21 கட்டுரைகள். தமிழச்சாதி பற்றி நினைத்த உயர்நிலைக் கவிஞனின் பாதையை சிந்திக்க வைக்கின்றன.
நூல் : பாரதியே தமிழ்(2025)
பக்:72
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
விலை:80/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614





நம்மை மீட்போம் ( உளவியல் கட்டுரைகள்)

 

பளீர் வெற்றி அடைய எல்லோருக்கும் கனவு உண்டு. ஆனால் அதை அடையவிடாமல் தடுக்கும் குணங்கள் பற்றிய சிறு கட்டுரைகள். சிறந்த வடிவில். எளிய நடையில் .
நூலாசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: புஸ்தகா டிஜிடல்
பக்:40
விலை:50/-
கழிவு:10% உண்டு
G pay:9698009614




எல்லா உணர்ச்சிகளும்:
Mani Mani,

வள்ளலார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பா

 

நிறுவன வேலைக்கு விண்ணப்பம் இடுவதை அறிவோம். ஆனால் ஈசனிடம் வள்ளல்பெருமானார் விண்ணப்பம் சமர்ப்பணம் செய்யும் கலிவெண்பா புதியது.,இதனை புதுக்கவிதை வடிவில் கவிஞர் எழுதியுள்ளார்.(2022)
சிவத்தலங்கள் அனைத்துக்கும் நம் சார்பில் வள்ளல்பெருமான் அருள் வேண்டிய பாடல்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன.
நூல் தலைப்பு:-
அருட்பிரகாச வள்ளலார் அருளிய
விண்ணப்பக் கலிவெண்பா.
( புதுக்கவிதை வடிவில் அருள் கல்கண்டு)
நூலாசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு: லாவண்யா
பக்:80
விலை:- 100/-
கழிவு:-20% உண்டு
G pay: 9698009614





காலம்தாண்டும் காதல் தூதுவன்


கம்ப இராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி முக்கியமானது. பலருக்கும் பயன்தருவது. அனுமன் புகழ் பாடும் இந்நூலை புதுக்கவிதை வடிவில் "காலம்தாண்டும் காதல் தூதுவன்" என எழுதியுள்ளார் கவிஞர்.(2023)
சுவாரசியமான எளிய நடை.
நூல்ஆசிரியர்: பா.சத்தியமோகன்
வெளியீடு:- புஸ்தகா டிஜிட்டல்
பக்:478, டெம்மி
விலை:530/-
கழிவு:25%
G pay: 9698009614





புன்னகை யுகம்


நல்ல நண்பனை இழப்பதிலிருந்து, படிக்கட்டுகள் ஏறுவதிலிருந்து,ஈரான் இஸ்ரேல் போர் சூழல் வரைக்கும் உண்மையில் புன்னகைபுரியும் சூழல் இல்லை.ஆனால் புன்னகையைக் கைவிட முடியாதவர்களாக; சிக்கலில் செயல்படுவதை காணப்படுவதை மேம்படுத்தி விவரிக்கும் மென் கவிதைகள்.
கிழிந்த குடை தைக்கறது..
பழைய கிழிஞ்ச குடை தைக்கிறது..என
நரைமுடி விபூதி மெழுகுநூலுடன் கூவும் கிழவர்
தைப்பது
பருவ மழை வரும் என்ற
நம்புதல் புன்னகை"
புன்னகை யுகம்( கவிதைகள்)
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:98+2
விலை:110/-
கழிவு:20% உண்டு
G pay:9698009614





தாத்தாவின் கதை வண்டி ( சிறார் கதைகள்)

"புல்கூட்டம் ஒன்று , ரோஜா இனம்பார்த்து மனம் வருந்தியது. "உங்களை அழகுப்பெண்கள் அணிவர்.எங்களை மிதிப்பர். நீங்களே உயர்வு" ; புகழை ஏற்காத
ரோஜாக்கள் சொல்லின:" அதோ வரும் பசுக்கூட்டப்பசியை தங்களால் மட்டுமே போக்க முடியும். கவர்ச்சியைவிட பசி தீர்க்கும் நீங்களே முக்கியம்" உள்ளிட்ட பல புதுக்குரல்கள்.
சிறார்கள் மகிழும் கதைவண்டி.
தாத்தாவின் கதை வண்டி
சிறார் கதைகள்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:64+2
விலை: ரூ70/-
கழிவு:-20% உண்டு
G pay: 9698009614








சாக்லேட் சாவிகள் ( நலம் தரும் யோசனைகள்)

 

ம்:ஏன் தோற்கிறோம் அல்லது கவலைப்படுகிறோம் என்ற கேள்விக்கு முதல் தடவை வரும் விடையை அப்படியே ஏற்க கூடாது. மீண்டும் ஒருமுறை விடை தேடணும்.அதையும் பரிசீலிக்கணும்.மீண்டும் ஒரு முறை என்று 5 ஆம் முறை வரும் விடை அடைவது சரியான வழிகாட்டும் என்கிறார்கள். இதனை Why Why Analysis என்பார்கள். அதுபோன்ற விடைகள் வெற்றி சாக்லேட் தரும் சாவிகள் என்கிறது தொகுப்பின் கட்டுரைகள். . மனோபாவத்தை மாற்றிக்கொள்ள உதவி செய்யும் எழுத்துகள்.
சாக்லேட் சாவிகள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:104+2
விலை: ₹120
கழிவு:20% உண்டு