ஆம் ! அப்படி ஒரு அரச காலம் இருந்தது
***************************
அரசன் என்பவன் தமிழறிவு பெற்றவனாக அக்காலத்தில் இருந்தார்கள். வறுமையில் வாடும் புலவன் தனது நிலையைச் சூசகமாகத்தான் சொல்வான் என்பதும் அறிந்திருந்தார்கள். தொண்டை நாடு (காஞ்சியில்) வாழ்ந்த இராமச் சந்திர கவிராயர் பாடிய பாடல் இதனை சித்திர கவி என்பார்கள்:-
“இரவலனே உனக்கு இல்லாதது என்ன?”
“இதயம்” என்ன?
“பர உணவு” எது?
“சுவையற்றது” என்ன?
“ சொல்பான்மை என்ன?”
தர உரை என்றால் அதற்கு ஒன்றும் சாற்றிலேன் நான்
“வர திரு வேங்கட நாதா!” என்றேன்
பொன் வழங்கினனே!”
விளக்கம்:-
அதாவது அரசன் என்னை ஐந்து கேள்விகள் கேட்டான். நான் வேறு எதுவும் சாற்றவில்லை.
“திருவேங்கடநாதா” என்ற ஒற்றைச் சொல்லைக் கூறினேன். அரசன் கேட்ட ஐந்து வினாக்களுக்கும் அந்த ஒரே வார்த்தை விடையாக அமைந்தது. அரசன் உடனே பொன் வழங்குகினான்.
வினா விடை
1) உனக்கு இல்லாதது என்ன? திரு - செல்வம்
2) இதயம் என்ன? வேம்- வேகும் ( வருந்தும்)
3) உணவு எது? கடன்: கடன் பட்ட பொருள்
4) சுவை அற்றது என்ன? நா - நாக்கு
5) சொல்பான்மை என்ன? தா - தருவாய் .
No comments:
Post a Comment