அதிகாரம் - சமரசம்
*********************
ஒரு முட்டை கூட
தன்னளவில் நிர்பந்தம் கொண்ட அதிகாரம் செய்கிறது
அருகருகே இருக்க வேண்டும்
ஆனால் கலந்து விடக் கூடாது என்று
வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும்
மிரட்டி வைக்கிறது
பிறகு அது மனிதர்கள் வாய்க்குள்
அழைத்துச் செல்லப்படுகிறது
அவ்வளவு அமைதியான சமரசத்துடன்
மற்றும் முணுமுணுப்பின் ஓசை துளியுமின்றி.
- பா.சத்தியமோகன்
No comments:
Post a Comment