முல்லா கதைகள்: 11
எடுத்தவர் தர வேண்டுமே
*******************
ஒரு சமயம் விலையுயர்ந்த ஐம்பது பொற்காசுகள் மதிப்புள்ள முல்லாவின் தலைப்பாகை ஒன்று கடைவீதியில் காணாமல் போய்விட்டது.
முல்லாவின் நண்பர் ஒருவர் “முல்லா! தொலைந்து போன தலைப்பாகையைத் தேடிக் கண்டு பிடிக்க முயற்சி எடுக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு முல்லா “முயற்சி எடுக்காமல் இருப்பேனா? என் தலைப்பாகையைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு பொற்காசு பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளேன்” என்று சொன்னார்.
அதைக் கேட்ட நண்பர் “ஐம்பது பொற்காசுகள் மதிப்புள்ள தலைப்பாகையைக் கண்டுபிடிப்பவன் ஒரு பொற்காசுக்காக உங்களிடம் தலைப்பாகையைத் திருப்பிக் கொடுப்பானா? விலை உயர்ந்த தலைப்பாகையை அவனே வைத்துக் கொள்ளலாம் அல்லவா?” என்று தனக்கு ஏற்பட்ட ஐயத்தைக் கூறினார்.
நண்பர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட முல்லா “தோழரே! உமக்கு ஏற்பட்ட ஐயம் எனக்கும் ஏற்பட்டதால், காணாமல் போன தலைப்பாகை மிகவும் பழையது. கிழிந்து போனது என்று அறிவித்துள்ளேனே” என்று சொன்னார்.
நீதி: மனித மனங்கள் பொருள் பற்றிலிருந்து வெளியே வருவதில்லை, மீண்டும் பொருள் கிடைக்க என்ன விதமான பொய்யும் சொல்பவை மனித மனங்கள்.
**
No comments:
Post a Comment