Thursday, 30 July 2026

ஆசிரியரின் நூல்கள் LIST :


வணக்கம்.
பா.சத்தியமோகன் அவர்களின் 123 நூல்களும் புஸ்தகா டிஜிடல் பதிப்பகத்தில் மின் நூலாக கிடைக்கின்றன. 
இங்கு வாசகர் வசதிக்காக தொலைபேசி எண்ணும்; புஸ்தகா டிஜிடல் தள தொடர்பும் தரப் பட்டுள்ளன.

  www.pustaka.co.in   @ புஸ்தகா டிஜிடல் பதிப்பகம் )

watsup number: +91 7418555884

I  கவிதைகள்:


1. Why we need little wings often? (Poems )

2.உடலெங்கும் ஒரு சிறுமி

3.பறவைகளின் இசை அமைப்பாளன்

4.முயன்றோர் காண்பர் தன்னுலகம்

5.வைரப்பிஞ்சுகள்

6. அம்மாவுக்கு ஒரு பரிசு 

7.காற்று வார்த்தைகள்

8.என்னவள் 

9.விலையில்லா மொழி

10.புன்னகை யுகம் 

11.மழையில் உலவும் மாய வெய்யில்

12.ஈசனின் தேசம்

13.எம் சிவமே

14.கடை வீதிக் கலைஞன் 

15.ஊஞ்சல் வயது

16.இளைப்பாற முடியா மரம்

17.தலை தாண்டியோர் ஆகாயம்

18.சொற்களுக்கு ஒன்றும் தெரியாது

19.மூங்கில் பாட்டு

20.அம்மாவின் தனிமைச் சதுரம்

21.காதல் நகர்

22.கடல் மேல் வயலின்

23.சொல் விழுங்கும் கிளி

24.நட்சத்திரங்கள் நிரம்பிய தட்டு.

25. அவன் பெயர் கார்கில்.

26. கண்ணுக்கு கீழே ஒரு வானவில்

27.தெருவில் நடக்கும் கண்கள்

28.அம்மா மண்டபம்

29.ஆகாயப் பேச்சு

30. காற்று மனித காவியம்

31. தன்னை அறிந்த கடல்

32.அவளும் நானும் காதல் கவிதைகள்

33. மழையில் நனையும் பொம்மைகள்

34.சிந்திக் கிடக்கும் இரு நகங்கள்

35. சரக்கொன்றை மரமாய் பிறப்போனோ

36. கல் குழந்தை

37. மகாகவி காளிதாசரின் மேகதூதம்

38.அப்பா என்றால் ஆயிரம் வானம்

39. மழைக்கு என்ன பரிசு தருவீர்கள்

40. கடல் நடுவில் நிற்கிறேன்

41. யுக அதிசயம் நீ

42. பிரபஞ்சத்தின் மூக்குத்தி

43. நானை அழிக்கும் நான்

44.யானைப்போர்

45.மின்மினிகள் பூத்த பாதை

46. வெறும் காற்றில் கூத்தாடியவன்

47.நம் பறவைகள் நாமும் பறவைகள்

48.வானமெல்லாம் கவிதை நிலம்

49. அவளுக்கென்று ஒரு சிலையும் இல்லை

50.ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் மலை

51. சிறுகோட்டுப் பெரும்பழம்

52.கணவனது டைனோசர்

53. Swinging Age

54. மரங்களில் நான் மருதமரம்

55.மின்னலைத் துளைத்த கணம்

56. யுத்த களத்திலிருந்து தாய்மொழியின் கடிதம்

57.பொன்வெளிப்பறவை


 கவிதை நூல்கள் @ லாவண்யா வெளியீடு


1. போய்ச் சேராக்கடிதம் (கவிதைகள்)

2.தனையிழக்கும் ருசி (பாரத ஸ்டேட் வங்கி பரிசு)

3.மீன்கள் கடிக்கும் மரம் (கவிதைகள்)

4.உட்புற நிலவு (கவிஞர்கள் திருநாள் விருது)

5. அவள் மயில் கண் விசிறி (கவிதைகள்)

6. வானம் மட்டும் இருக்கிறது (கவிதைகள்)


II  சிறுகதைத் தொகுப்பு


1.பொதிமாடுகள்

2.எரியும் பனிக்கட்டிகள்

3.விட்ட இடத்தில் தேடு

4.ஒவ்வொரு சொட்டிலும் மழை

5.மெக்கானிக்கல் சாமியார்

6.தரிசனம்

7. காளி விபூதி


III  நாவல்கள்


1.காக்கைச் சிறகினிலே (2 ஆம் பதிப்பு)

2.சலனத்தீவுகள்

3.சித்தன்

4.சப்தமண்டலவாசி


IV ஆன்மீகம்


1) 63 உச்சகட்ட சோதனைகள் உச்சகட்ட சாதனைகள் (2 ஆம்பதிப்பு)

2) தெய்வக் கவி சேக்கிழார் அருளிய பெரியபுராணம் புதுக்கவிதை(2ஆம்பதிப்பு ) 

3)வள்ளலார் அருளிய விண்ணப்ப கலிவெண்பா புதுக்கவிதை (2 ஆம்பதிப்பு)

4)புதுக்கவிதை அடிவில் கம்பர் அருளிய 

“காலம் தாண்டும் காதல் தூதுவன்”   சுந்தரகாண்டம்

5) திருப்பாவை சொர்க்கங்கள்

6) கொரானா நீக்கிய கந்தர் அலங்காரம்

7)செல்வம் தரும் கந்தர் அனுபூதி

8.சித்தம் அழகியார் பாடும் திருவெம்பாவை

9. அபிராமி அந்தாதி

10. காளிதாசனின் குமார சம்பவம்

11. மகான் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எனும் தேன்

12.இன்றைய இளைஞர்களுக்கு குமரேச சதகம் எளிய உரை


V சமூக கட்டுரைகள்


1.நம்மை மீட்போம்

2.சாக்லேட் சாவிகள்

3.குழந்தைகளின் தனிமை

4.மனசுக்கு இன்பாக்ஸ்

5.பாரதியே தமிழ்

6.மனக்கவலை தீர்க்கும் 101 டாக்டர்கள் (திரிகடுகம்)

7.தினம் ஒரு தரிசனம் (2 ஆம் பதிப்பு)

8.கண்ணாடி உறவுகள்(2ம் பதிப்பு)

9.காற்றில் ஏது பள்ளங்கள்?

10. திருவள்ளுவர் காட்டும் பல்லுயிர்கள்

11.வாழ்வை வைரத்தூண் ஆக்குவோம்

12. அவ்வையார் இதயம்

13.பழைய சாதம்

14. தன்னைத் தன்னால் உயர்த்துக



VI சிறுவர் சிறுமியர் கதைகள்


1. சாருவுக்கு தாத்தா சொன்ன கதைகள்

2.உப்மா மரம் உண்டா தாத்தா?

3.தாத்தாவின் கதை வண்டி

4.எட்டுகால் பூச்சிக்கு பத்து கால்

5.ஒண்ணாங்கிளாஸ் கதைகள்

6.திருக்குறள் சுற்றுலா

7. அப்பா இல்லாத சிறுவன்

8. அப்பா ஒரு கதை சொல்லு

9.திருக்குறள் நம் சகோதரன்


லாவண்யா வெளியீடு நூல்கள்


7.கண்ணா நீ காப்பு (ஆன்மீகம்)

8.காக்கைச் சிறகினிலே (நாவல் இலக்கியபீடம் பரிசு)

9. சேக்கிழார் பெரியபுராணம் புதுக்கவிதை வடிவில் 1&2(ஜெயந்தன் இலக்கிய விருது)

10.அறுபத்து மூன்று உச்சகட்ட சோதனைகள் உச்சகட்ட சாதனைகள் (ஆன்மீகம்)

11.கண்ணாடி உறவுகள் (கட்டுரைகள்)

12.தினம் ஒரு தரிசனம் (கட்டுரைகள்)

13.புதுமொழி நானூறு (மொழிபெயர்ப்பு)

14.விண்ணப்ப கலிவெண்பா (ஆன்மீகம்)

15. அப்பா வாசனை (சிறுகதைத் தொகுப்பு)

*****


கவிஞர் பா. சத்தியமோகன் BIO DATA

 கவிஞர் பா. சத்தியமோகன்: பிறப்பு (15.5.1964)                         

பிறப்பும் வாழ்வும்

பெற்றோர்: தெய்வத்திரு.லலிதாம்பாள் & தந்தையார்: சு.பார்த்தசாரதி  

பிறப்பு:       விழுப்புரம் 23.6.1964

பூர்வீகம்: துறைமங்கலம் (பெரம்பலூர் அருகே)

சொந்த ஊர்: மணக்கால். இலால்குடி வட்டம்.. திருச்சி.

கல்வித்தகுதி: மின்னியல் & மின் அணுவியல் பட்டதாரி

                          அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்

                          M.B.A. (Human Resources), அழகப்பா பல்கலை.

 பெற்ற பட்டங்கள்:  “கவித்தென்றல்” பட்டம் 

 ஆன்மீகம்   : திருவாவடுதுறை 23 ஆம் குரு மகா சந்நிதானம் அளித்த

                              சைவ சித்தாந்த ரத்னா

சமூகத் தொண்டு:    (2009-2024) 15 ஆண்டுகள் இராமலிங்க வள்ளலார் 

                           சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளை

                           சிறார் முதியோர் இல்லம், மேட்டுக்குப்பம். வடலூர்

குடும்ப வாழ்வு: மனைவி லாவண்யா M.A (தமிழ்)

மகன்: ச. அருண் சித்தார்த் B.E. (mech) 

மகள்: ச. அபிநயா B.H.M.S.

பேரன்கள்: 02 பேத்தி:- 01

முதல் கவிதை       : கணையாழி (1993)/ “நானும் நானும்”

அறிமுகம் செய்தவர்: சுஜாதா

வெளியான நூல்கள்: 121

                            இரண்டு ஆங்கில கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்ட 62 கவிதை நூல்கள், சிறுகதைகள்,கட்டுரை, ஆன்மீக நூல்கள், நாவல் உட்பட.

சாகித்ய அகாதமி தொகுப்பில்: “மண்ணில் தெரியுது வானம்” (2009)

மத்திய அரசுப்பணி: 03 ஆண்டுகள் தொலை பேசித் துறை மற்றும்

                            36 ஆண்டுகள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி.   தலைமை மேலாளராக மின்னியல் துறை பணி ஓய்வு (2024).

இவருடைய கவிதைகள் பற்றி:   ஆஸ்திரிய கவிஞருடன் ஒப்பிடத்தக்கவை என்று கவிஞர். ஞானகூத்தன் கூறுகிறார். “இந்த நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்” நூலில் இவருடைய கவிதைகள் பல புறநானூற்று கவிதைகளோடு ஒத்து போவதாக எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க பணி: பெரிய புராணம், சுந்தரகாண்டம் ( புதுக்கவிதை வடிவில்)

விருதுகள்:

1.ஸ்டேட் பேங்க் இலக்கிய விருது

2.கவிஞர் வைரமுத்து வழங்கிய கவிஞர்கள் திருநாள் விருது 

3.வைகறை இலக்கிய வாசல் விருது.

4.ஜெயந்தன் இலக்கிய விருது .(தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களால் வழங்கப்பட்டது 2011)

5.சேக்கிழார் இலக்கிய விருது (சென்னை) 

6.கவிஞர் சிற்பி இலக்கிய பரிசு ( கோவை)  

7.எழுத்துக்களம் இலக்கிய விருது 

8.புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் வழங்கிய சேக்கிழார் விருது..  

9.நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது 

10.வேரித்தாஸ் ஆசியா தமிழ் ஒலிபரப்பு கவிதை விருது, 

பரிசுகள்:

1.புதுவை வானொலியில் தேர்வான “அம்மாவுக்கு ஒரு பரிசு” என்ற தனது கவிதையை (குஜராத்) ராஜ்கோட்டில் தேசிய கவிச் சம்மேளனத்தில் தமிழ் மொழியின் சார்பாக கலந்து கொண்டு வாசித்தார். அனைத்து இந்திய மொழிகளிலும் அக்கவிதை குடியரசு தினத்தன்று (26.1.2003) ஒலிபரப்பானது.

2.கலைமகள் அமரர் ராமரத்னம் நினைவு குறுநாவல் முதல் பரிசு- “சலனத்தீவுகள்”

3.இலக்கியபீடம் நாவல் போட்டி முதல் பரிசு-காக்கைச் சிறகினிலே.

4. கவிதை உறவுகள் இவருடைய “அம்மாவுக்கு ஒரு பரிசு” கவிதை நூலுக்கு பரிசு வழங்கியுள்ளது.

5. அமுதசுரபி சிறுகதைப் பரிசு “அப்பா வாசனை” சர்வதேசத் தன்மை வாய்ந்தது என சுஜாதா ஆனந்த விகடன் இதழில் “கற்றதும் பெற்றதும்” பகுதியில் எழுதியுள்ளார்.

மொழிப்பெயர்ப்பு:

1. SILENT RIVERS எனும் தொகுதிக்காக ஆங்கிலத்தில் வெளியானத2. மலையாள மனோரமா இதழிற்காக மலையாளத்திலும் இவர் கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


        ****


Tuesday, 28 July 2026

குரு நமச்சிவாயர்

 அக தரிசனம் அருளும் குரு நமச்சிவாயர்  


வாழ்நாள் பாக்கியம் இந்நூல்


ஓம் சிவாயநம. ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் அண்ணாமலையில் நமச்சிவாய மூர்த்தி என்று ஒரு சிவயோகியார் எழுந்தருளியிருந்தார். அவர் அண்ணாமலையில் ஒரு குகை இயற்றிச் சிவயோகத்தில் இருந்து வந்தமையால் குகைநமச்சிவாயமூர்த்தி எனக் கூறப்பட்டனர். அவர் அக்குகையின் பக்கத்தில் வளர்ந்தோங்கி இருந்த ஓர் ஆலமரத்தில் ஊஞ்சல் இட்டு, அதில் யோக நித்திரை கொள்வது வழக்கம். அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவர் இருந்தார். அவர் ஞானாசிரியரின் அருகேயிருந்து அன்புடன் பணி செய்து கொண்டிருந்து பிற்காலத்தில் குருநமச்சிவாயர் என தமது குருவினால் அருளாசி பெற்று. சிதம்பரம் அனுப்பப் பெறுதல் வரலாறும்; அவர் இயற்றிய 100 பாடல்களும் மானிட சமூகத்துக்கு அக தரிசனம் தருவன.

இந்நூலினை முதன்முதலில் பசவராஜ் எனும் அன்பர் திருப்பாற்கடலில் 1980 களில் பகிர்ந்தார். மிகவும் பழைய நூலாக இருந்தது. சில பிரதிகள் மட்டுமே உள்ளன என்றார். பச்சை எழுத்துகளில் நூல் அச்சிடப்பட்டிருந்தது.

அதனை மறு ஆக்கம் செய்வேன் என அப்போது எண்ணவில்லை. காப்பாற்றி வைத்திருந்தேன்.  சிதம்பரத்தின் மாபெரும் வரலாறு எழுதினால் அடியார்களாகிய குரு நமசிவாயர் ஜீவ சமாதியிலிருந்தே தொடங்கும் என அந்நூல் உணர்த்தியது. 

குருபூர்ணிமா நாளில் நிறைவு செய்துள்ளேன். நூலாக வெளிவருவது காலத்தின் கையில் உள்ளது.

Saturday, 25 July 2026

தொலையாவழி - 1

 நமது சொல்குற்றம் x தொலையாவழி

*********************************************

நண்பர்களே. நாம் பயணிக்கிறோம் இவ்வுலகில். சிலர் தவறுகளைப்பார்த்து நாம் அவர்கள் முதுகு பின்னே சிரிக்கிறோம். அது எளிதாக இருக்கிறது.

ரத்தத்துளிகள் தேனாக நினைத்துக்கொண்டு முட்களை மென்று தின்னும் ஒட்டகம் போல மேலும் மேலும் பலர் தவறுகள் செய்கின்றார்கள். அவர்களையும் நாம் பார்க்கிறோம்.

சிலர் முதுகில் வாழ்வில் அவர்கள் பட்ட அடிகள் விளாறல் விளாறலாக பதிந்து இருப்பதைக்காட்டுகின்றார்கள். ஏளனம் செய்வதை இழிவு படுத்தப்படுவதை விருது போல ஏற்றுக்கொண்டு முன்னேறுபவர்கள் இருக்கிறார்கள். அதனை வித்தை என்று நாம் சொல்ல வேண்டாம். பழிக்க வேண்டாம்.

ஏன் இவ்வாறு எழுதுகிறேன்? ஒவ்வொருவரையும் தொலையாவழி என்ற ஒன்று அழைக்கப் போகிறது. வழி என்பதற்கு அர்த்தம் தெரியும். வழி என்றால் பாதை, பாதை என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையும். ஆனால் இந்த வழி அப்படி அல்ல. நடக்க நடக்க நடக்க விரிந்துகொண்டே இருக்கப் போகிறது. 

தொலைதூரம் நீநீநீ..ண்ட இவ்வழியில் நாம் பயணம் செய்தே தீர வேண்டும் என்பதே இயற்கையின் கட்டளை. எண்ணம் சொல் செயல்களால் நாம் மாசில்லாமல் வாழ்ந்தால் அதன் கடன்களை அடைத்துவிட்டால் நமக்கு பிறப்பு இருக்கப் போவதில்லை. பிறப்பு இல்லாமல் போவதால் இறப்பு என்ற தொலையாவழியும் நமக்கு நேரப் போவதில்லை. 

பிறரை இழிவாக நினைப்பது குற்றம். தவறு. யாருக்கும் தெரியாமல் நினைத்தாலும் தொலையா வழி அதனை கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது.

எது எப்படியோ.

ஒன்று நிச்சயம். தருமம் என்ற அரூபத்தின் கண்களால் உலக மனிதர்கள் எப்போதும் எக்கணமும் கவனிக்கப் படுகிறார்கள். தருமம் செய்யாதவர்கள் தொலையாவழிக்கு விரைந்து அனுப்பப் படுகிறார்கள்.


இல்லாதவர்களுக்கும் பசியால் வாடுவோருக்கும் வறியவர்க்கும் நம்மால் இயன்ற சிறிய அளவேனும் பசி போக்குவது  நம்மால் இயலும்தானே. ஏழைக்கு இரண்டு இட்லி பார்சல் வாங்கித் தருவதாகவும் அது அமையலாம். அதைச் செய்யலாமே.  அதுதான் பாதை. ஏனோ நாம் பயணம் துவங்குவதேயில்லை.

*** 


Friday, 24 July 2026

உலகம் பெற்றது எவர்? ( 31)

 உலகம் பெற்றது எவர்? 

*********************************

நின்னை நீயே பெற்றுள்ளாய். ஆம். இந்த உலகம், அதன் செயல்கள் அனைத்தும் உன்னுடையவை. இதைத்தவிர வேறெங்கும் போய் உன்னைத் தேட வேண்டியதில்லை. மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட வாழ்வு பெற்று அவதிப்படும் என்னையும் ஆள்வது உன் கடமை அன்றோ? என்னை உடையவனே. எழுத்தறியும் பெருமானே. எனக்கு அருள்வாயாக.



பாடல்:31


நினையுடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய்

மனையுடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே

இனையுடையான் என்றிங்கெனையாள்வதுன் கடனே

எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


***


ஒற்றியூர் திருக்கோவிலுள் யார் உள்ளார்? ( 30)

 ஒற்றியூர் திருக்கோவிலுள் யார் உள்ளார்? 

*************************************************

 உலகம் முழுதும் கடைந்து பெறப்பட்ட விஷத்தை, மக்கள் நலனுக்காகவே உலக நலனுக்காகவே தொண்டையில் வைத்து அந்த விஷக்கறை பெற்ற நீல கண்டா! தயவு கொண்ட ஈசனே. எழுத்தறியும் பெருமானே . எனக்கு இவ்வாழ்வு அயர்ச்சி தருகிறது. மலர்ச்சியாய் மாற ஒரே ஒரு சொல் சொல்லமாட்டாயா. ஒருவேளை ஒற்றியூர் திருக்கோவிலின் உள்ளே இல்லாமல் நீங்கிவிட்டாயோ. அதுவும் அறியேன்.   


பாடல்:30


ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதி நீ

அல்லையோ நின்றிங் கயர்வேன் முன் வந்தொருசொல்

சொல்லையோ ஒற்றியூர்த் தூய திருக்கோயிலுள் நீ

இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே. 


***


நமது பாவப் பட்டியலில் எவை உள்ளன? ( 29)

 நமது பாவப் பட்டியலில் எவை உள்ளன?  


***************************************************

நான் என்னை  மிக உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் என் பாவங்களின் பட்டியல் கையில் சிக்கியது. படித்துப்பார்த்தேன். காமம் (பெரும் பேய்) பட்டியலின் முதலில் இருந்தது. மையல் எனும் ஆசை, ஆணவம், பொய், பொறாமை, சினம், வஞ்சனை, கொலை ஆகியனவும் கண்டேன். இத்தனை பாவமும் செய்துள்ளேனே.எழுத்தறியும் பெருமானே எனக்கு இரங்குவாயாக.


பாடல்:29


பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்

வித்தனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம்

கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்

இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.


***


எது நம்மைக் கொட்டி எடுக்கும் தேள்? ( 28)

 எது நம்மைக் கொட்டி எடுக்கும் தேள்? 

******************************************

முற்பிறப்பில் செய்த வினைகள் என்னைத் தேள் போலக் கொட்டுகின்றன. மனம் வெதும்புகின்றது. எதையும் ஒளிக்காத உன்னை அழைத்தேன் . உன் முன் அழுதேன். வாடுகின்றேன். நல்லோர்கள் தேவர்கள் வாழ வேண்டும்; உலகம் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நஞ்சு உண்டாயே என் அருமை அப்பா! இன்று உன்னைக் காணமுடியாமல் எங்கே ஒளிந்து கொண்டாய் என் எழுத்தறியும் பெருமானே?


பாடல்:28


வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்

அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்

இங்கொளிக்கா நஞ்சமுண்ட என் அருமை அப்பா நீ

எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


****


நம் எண்ணங்களைத் தாண்ட முடியுமா? (27)

 நம் எண்ணங்களைத் தாண்ட முடியுமா? 

*************************************************

எழுத்தறியும் பெருமானே. எனது வாட்டத்தைக் கேள். பிறப்பு சுழல் ஒரு புறம் என்னை வாட்டுகின்ற இத்தருணத்தில் நலம் என்ற ஒன்று கிடைக்குமா என்ற ஏக்கமும் ஒரு வாட்டம்தான். சுமைதான்.

 இந்நிலையில் உண்ண உண்ணத் தெவிட்டாத உண்ண உண்ணக் குறையாத அமுதமான உன்னையன்றி வேறு ஒன்றை எவரால்தான்  எண்ண முடியும்? முடியாது.எனக்கு அருள்வாயாக.



பாடல்:27 


பண்ண முடியாப் பரிபவங்கொண்டிவ்வுலகில்

நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்

உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும்

எண்ண முடியாதே  எழுத்தறியும் பெருமானே.


***


நம் அன்பின் அளவு எவ்வளவு? ( 26)

 நம் அன்பின் அளவு எவ்வளவு? 

***************************************

பலர் நினைக்கிறார்கள் ஈசன் மீது மிக பலமான அன்பு கொண்டிருப்பதாக. உண்மையில் நாம் நெஞ்சம் முழுதும் முட்கள் கொண்ட  பெண்களையே நேசித்து கள்ளம் கொள்கிறோம். கிட்டத்தட்ட ஒரு நாயின் குணம். அல்ல. அல்ல. நாயாகவே கடைசியில் ஆகிவிடுகிறோம். 

உண்மையில் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது ஒருநாள் புரிய வருகிறது. நாம் உள்ள மட்டும், இந்த உடல் உள்ள மட்டும், நம் உள்ளம் உள்ள மட்டும் தனது அன்பர்களுக்கு உதவும் ஈசன் திருவடி மீது அன்பு செலுத்தி வாழ்ந்திருக்க வேண்டும். திருவடிப்பற்று நமக்கு எள் அளவு கூட இல்லையே எழுத்தறியும் பெருமானே, எனக்கு அருள் வயாக.



பாடல்: 26


முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்

கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு

உள்ளளவும் அன்பர்க் குதவும் உன் தாட் கன் பொருசிற்

றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.


***


நாம் சரண் அடைய என்ன அவசியம் இப்போது? (25)

 நாம் சரண் அடைய என்ன அவசியம் இப்போது?  

*******************************************************


பலர் நினைக்கிறார்கள், வாழ்க்கை தன் வழியில் செல்லட்டும் அல்லது செல்கிறது என்று. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை வள்ளல் பெருமான் சொல்வது இப்பாடல்.

ஐம்புலன்கள் நம்மை “இன்பம் காட்டுகிறேன் வா!” என்று சொல்லி பள்ளங்கள் கொண்ட இருட்டில் நம்மைத் தள்ளுகின்றது. மனம் இதனை உணர்ந்தும் தடுக்க முடியாமல் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக தனது வாழ்நாள் முழுதும் கட்டிக்கொண்டே வருகின்றது. சுமக்க வைத்த மூட்டைகள் தரும் துன்பங்கள் இன்று பெரிதாகிவிட்டன. ஓ! எல்லாவற்றையும் நம் மனதால் சரி செய்து கொள்ளலாம் என இருந்தேன். அவற்றை இனி மனதை விட்டு எடுக்க முடியாது - உன் அருள் கிடைத்தால் தவிர - துன்பச் சுமை- என்னால் எடுக்க முடியாது. எழுத்தறியும் பெருமானே. எனக்கு அருள்வாயாக. 


பாடல்:25


மடுக்க முடியா மல இருட்டில் சென்று மனம்

கடுக்க முடியாப் புலனால் கட்டிச் சுமக்க வைத்த

தொடுக்க முடியாத துன்பச் சுமையை இனி

எடுக்க முடியாதே எழுத்தறியும் பெருமானே.


***


நம் விதியை மாற்றும் வழி இருக்கிறதா? (24)

 நம் விதியை மாற்றும் வழி இருக்கிறதா?

*************************************************

 எழுத்தறியும் பெருமானே. விதி என்ற ஒன்று என்னைத் தாக்காமல் தப்பிக்க வேண்டும். அடுத்த கட்டமாக அந்த விதி என்னளவில் செயல்படாது எனும் கதியே என் விதியாக வேண்டும். 

. இந்த எளியேனின் மன அமைப்பு பிழைகள் கொண்டதென்று என்றும், கொடிய குற்றங்கள் கொண்டது என்றும் என்னைத் தள்ளி வைத்துவிட்டால் இந்தப் பொய்யனுக்கு உதவிடவோ விதியை மாற்றவோ எனக்கு யாருமில்லை. உலகிலேயே கொடியது பணத்தால் அல்ல, எண்ணத்தால் ஏழையாக இருப்பது. உன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று உளவு அறிய முடியாத ஏழை நான் . எனக்கு அருள் செய்ய எண்ணுவாயாக.


பாடல்: 24

 

ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன் இவன்

பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய

தாழை என எண்ணி என்னைத் தள்ளிவிட்டால் என் செய்வேன்

ஏழை நான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

***

ஆட்கொள்ளப்படுவது என்று? ( 23)

ஆட்கொள்ளப்படுவது என்று?

************************************

எழுத்தறியும் பெருமானாகிய ஈசனே. எனக்குள் ஒரே ஒரு கேள்விதான். என்னைச் சுற்றிலும் வஞ்சகர்கள் என்பதாக எண்ணுவது சரியல்ல. அவர்கள் வழியில் அவர்கள் போகட்டும். 

என் பாதை என்ன? உன் பொன் அடிக்கு ஆளாக வேண்டும் என்ற ஒரே துடிப்போடு வாழும் மேலானவர்கள் இருக்கின்றார்களே! அவர்கள் திருவடியை நான் வாழ்த்தலாம் அல்லவா? அதனையும் நான் செய்யாத ஒரு நாயாக உள்ளேன். தேன் பாகு சர்க்கரைப் பாகு அமுதப்பாகு வெல்லப்பாகு என்றெல்லாம் தனிச்சுவை தரும் உன் அருளைப் என்று எனக்கு தரும் நாள் எதுவோ. அதனை என்னால் அறிய முடியவில்லையே.  எஅனக்கு அருள்வாயாக.



பாடல்:23


போகின்ற வஞ்சகரைப் போக்கி உன்றன் பொன் அடிக்காள்

ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்

பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின் அருளை

ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே. 


***


 

எந்த ஏக்கம் நமக்கு நன்மை தரும்? (22)

 எந்த ஏக்கம் நமக்கு நன்மை தரும்?

*******************************************

ஒற்றியூர் வாழும்  எழுத்தறியும் பெருமானே. எனக்கு ஒரே ஒரு ஏக்கம்தான். நேசம் இல்லாத பொய்யான அடியவனாக நான் இருக்கிறேன். ஊக்கமோ மகிழ்வோ இல்லாத எனது நெஞ்சத்தின் உறவு அகலச் செய்துவிட்டால் தூக்கமில்லா  ஆனந்தத் தூக்கம் எனக்கு கிட்டும் அல்லவா? எஅனக்கு அருள் செய்வாயாக.


பாடல்:22


நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்

ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்

தூக்கமிலா ஆனந்தத் தூக்கம் அன்றி மற்றும் இங்கோர்

ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


நாம் எப்படி கருணை பெற வேண்டும்? (21)

 நாம் எப்படி கருணை பெற வேண்டும்?  

*******************************************

உத்தமனாகிய  எழுத்தறியும் பெருமானே. நீ என்னை ஏற்காமல் அகற்றுவாய் என்றால் என்னால் தாங்க இயலாது. உனது ஊர் சொல்வேன். பேர் சொல்வேன். நினது திருவடிப் பெருமைகளைச் சொல்வேன். எதுவாயினும் எனது பிழை எதுவென நேராகச் சொல்வாயாக. அப்படி சொல்லாமல்  மவுனம் காப்பது, உனக்கு அழகல்ல நீதியும் அல்ல என உனக்கு யாரால் சொல்ல இயலும்? எனக்கு அரூள்வாயாக.


பாடல்:21


ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்

சீர்சொல்வேன் என்றனை நீ சேர்க்கா தகற்றுவையேல்

நேர் சொல்வாய் உன்றனக்கு நீதியீதல்ல என்றே

யார் சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.


நாம் வெம்புவது எதனால்? (13)

 நாம் வெம்புவது எதனால்?   

*********************************

மின்சாரம் போல் நோக்கும் பெண்களின் கண்கள் தரும் விருப்பத்தினால் மனம் வெம்புகின்றது. ஆசை வாட்டுகின்றது. ஆனாலும் ஈடில்லா உன் தாயுள்ளத்தால் பொன்போன்ற உன் திருவடி மீது  தீரா விருப்பமாக என் மனநிலையை மாற்றி அருளினால் உலகில் எனக்கு சமம் யாருமில்லை எனும் நிலை அடைவேன். எழுத்தறியும் பெருமானே அந்நிலையை  எனக்கு அருள் வாயாக.

பாடல்:13

மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்

தன்போல்வாய் என் ஈன்ற தாய் போல்வாய் சார்ந்துரையாப்

பொன் போல்வாய் நின் அருள் இப் போதடியேன் பெற்றேனேல்

என் போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.


***


நாம் எங்கு உள்ளோம்? (20)

 நாம் எங்கு உள்ளோம்?

*********************************

எனக்கு ஒன்று புரிகின்றது.       நான் ஆணவம், கன்மம், மாயம் எனும் மூன்று மலக் கடல்களில் தத்தளிக்கின்றேன்.  நீ என்னை ஆளாவிட்டால் அடியார்கள் எனை நோக்கி கைகொட்டிச் சிரிப்பது உறுதி. அது மட்டுமல்ல என்னை நோக்கவும் கூசுவார்கள் . அந்த அவமானம் எனக்கு வேண்டாம். எழுத்தறியும் பெருமானே, எனக்கு அருள்வாயாக.


பாடல்:20


மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்

ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்

கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்

ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


***


யார் மிகப் பெரிய ஏழை? ( 19)

யார் மிகப் பெரிய ஏழை?

***********************************

என் குற்றங்கள் அளவிட முடியாதன. அது  தங்கத்தை மதிக்கிறது. ஆனால் பொன் போன்ற உன் திருவடி குறித்து போற்றுவதும் இல்லை. மனதினால் எண்ணுவதும் இல்லை. உலக வாழ்வு நிலை என மயங்கி எந்நேரமும் இயங்குகின்றது.  வாழ்நாளெல்லாம் துன்பப்படும் ஏழை கூட , வயிற்றுப்பசி என்ற ஒரு துன்பத்தை மட்டுமே அடைகிறான். நானோ அந்த ஏழையினும் ஏழை. ஆம். எண்ணத்தால் உன் பொன்னடி போற்றாத ஏழை. என் எண்ணம் உயர்த்துக. உன் பொன்னடி போற்றச் செய்க.  எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


பாடல்:19


பொன்னை மதித்தையா நின் பொன்னடியைப் போற்றாத

கன்னிகரும் நெஞ்சால் கலங்கின்ற கைதவனேன்

இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய்

என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.


************


நாம் எதனை இகழ்கிறோம்? ( 18)

 நாம் எதனை இகழ்கிறோம்?   

**********************************

எனது மனம் ஒரு கல் ஆகிவிட்டது. ஏதோ ஒரு கானகத்தில் அது அலைகிறது. இது கூட பரவாயில்லை. மேலும் அது ஒரு தவறு செய்கிறது. அது என்ன வெனில் புல் என்ற சிறிய தாவரத்தை மிகப் பெரும் அளவில் மதிக்கிறது. ஆனால் பசும் பூக்கள் கானகமெங்கும் கண்டும் இகழ்வது ஏன்? பொய்யனாகிய இந்த அடியவன் அடைகின்ற வேதனைக்கு எல்லைக் கோடு இல்லை. எழுத்தறியும் பெருமானே எனக்கு இரங்குவாயாக.


பாடல்:18


கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்

புல்லை மதித்தையோ பைம்பூ இழந்த பொய்யடியேன்

ஒல்லைபடுகின்ற ஒறுவே தனை தனக்கோர்

எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.


நாம் சோடை போவது ஏன்? ( 17)

 நாம் சோடை போவது ஏன்?  

*****************************************

எழுத்தறியும் பெருமானே. என் மனதின் அசல் தன்மைகள் நீங்கி இன்று  ஓர் பாதகனாக நிற்கின்றேன். ஏன்? ஐம்புலன்கள் என்னை வெங்கதிர்கள் வாட்டுவது போல வாட்டின அதனால் நான் இவ்வாறு காய்ந்து வறண்டு தளர்ந்தேன்.  இந்நிலையில் நீ எனக்கு என் தாகம் தீர அருள் நீர் தந்து தாகம் தணிப்பாயாக. என் வாட்டம் இன்னுமா அறியவில்லை? எனக்கு அருள்வாயாக.


பாடல்:17

பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்

துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்

நின்னருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்

இன்னும் அறியாயோ எழுத்தறியும் பெருமானே.


நம் துயரம் எப்படிப்பட்டது? ( 16)

 நம் துயரம் எப்படிப்பட்டது?   

**************************************

தீமையின் இருப்பிடமான எனது மனதினால் அடையும் துயரம் , வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள் தரும் துயரம் போன்றது. அளவுக்கு அதிகமான செல்லம் தந்து வளர்த்தமைபோன்றது அந்தத் துன்பம். 

அந்தத் துன்பங்களை பாட்டினால் பாடி எழுதலாம் என முயற்சித்தேன் , அதுவோ நினது அடியார் புகழ் போன்று ஏட்டுக்கு அடங்காத  அளவில் விரிகின்றது. நான் என்ன செய்வேன் எழுத்தறியும் பெருமானே. என் மீது இரக்கம் காட்டுவாயாக.


  பாடல்:16


வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளை எனத்

தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்

பாட்டுக் கடங்கா நின் பத்தர் அடிப்புகழ் போல்

ஏட்டுக்கடங்காது எழுத்தறியும் பெருமானே. 


***


நம்மை ஈசன் பொறுப்பது ஏன்? ( 15)

 நம்மை ஈசன் பொறுப்பது ஏன்?    

*************************************


என் அருமைத் தாய் போன்ற எழுத்தறியும் பெருமானே. சொல்ல முடியாத அளவு துன்பம் தரும் இந்த பூமியில் நான்  படாத பாடுகள் இல்லை. இத்தனைத் துயரமும் உனது திருவடி சார்பினால் தீரும் என அறிந்தும் நான் அதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை என்றாலும் கீழ்மை பொருந்திய எனது குற்றங்களைப் பொறுத்தல் உனக்கே பொறுப்பாகும். 



பாடல்:15


பன்னரும் இப்பார் நடையில் பாடுழன்ற பாதகனேன்

துன்னிய நின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்

புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே

என்னருமைத் தாய் நீ எழுத்தறியும் பெருமானே.


நாம் ஏன் புண்ணியமற்று ஏமாறுகிறோம்? (14)

 நாம் ஏன் புண்ணியமற்று ஏமாறுகிறோம்? (14)

****************************************************

திருவொற்றியூர் வாழ் எழுத்தறியும் பெருமானே  பூக்களில் தேன் அருந்தும் வண்டினைப் போல நினது திருவடியே கதி எனச் சார்ந்து  உனது பொன் போன்ற அருளை புண்ணியம் செய்தவர்கள் பெற்றுக்கொண்டிருக்க, நானோ காமம் எனும் கள் அருந்தி கண் மூடி ஏமாந்துகொண்டிருக்கிறேன். என்னை மீட்டு உன் திருவடிப் பேற்றினில் ஈடுபடுத்தி கரையேற்றுவாயாக.



பாடல்:14


பூ மாந்தும் வண்டென நின் பொன்னருளைப் புண்ணியர்கள்

தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோ நான்

காமாந்த காரம் எனும்கள்ளுண்டு கண்மூடி

ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே. 


***


நாம் சொன்ன அளவில் நம் துன்பம் போகுமா? (12)

 நாம் சொன்ன அளவில் நம் துன்பம் போகுமா?   

***********************************************************


எழுத்தறியும் பெருமானே. உன்னை வணங்கி தவமும், மாதவமும் செய்கிறவர்கள் துன்பம் தீர சிவனே என்கிறார்கள். கங்கை சடைப் புண்ணியனே என்கிறார்கள். சிவ நாமம் சொன்ன அளவிலேயே துன்பம் தீர்கிறது என்கிறார்கள். ஆனால் என்னளவில் நடை பெறவில்லை. என் மீது இரங்கி துன்பம் நீக்குவாயாக.


பாடல்:12

மன்னளவில் சோதி மணிபோல் வாய் மாதவத்தோர்

தென்னளவும் வேணி சிவனே என ஒரு கால்

சொன்னளவில் சொன்னவர் தம் துன்பொழிப்பாய் என்பர் அது

என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே. 


**

நாம் கன்றுக்குட்டியைப் போல அழுதோமா? (11)

 நாம் கன்றுக்குட்டியைப் போல அழுதோமா? 

**************************************************

தில்லைப் பெருவெளி மன்றத்தில் நடனம் செய்யும் மாணிக்க மாமலையே. கரத்தில்மழு ஏந்தி வெற்றி பெறும் வித்தகனே என உன் பெருமைகளை எல்லாம் பாடி உருகி தாயைப் பிரிந்த கன்று அழுவது போல அயர்கிறேன்.அழுகிறேன். என் கண்ணீர் துடைத்து அருள என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே? எனக்கு அருள்வாயாக.


பாடல்:11

மன்றினிடை நடஞ்செய் மாணிக்க மாமலையே

வென்றி கையுடைய வித்தகனே என்றென்று

கன்றின் அயர்ந்தழும் என் கண்ணீர் துடைத்தருள

என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.


நாம் தள்ளப் பட்டால் நம் கதி? (10)

  நாம் தள்ளப் பட்டால் நம் கதி? 

******************************************


குளிர்ந்த கொன்றை மலர் மாலை சூடிய ஈசா. சங்கு கொண்ட விஷ்ணுவும்; தாமரையில் வாழும் பிரம்மனும் காண இயலாத ஈசா. உமை ஒரு பாகம் கொண்டவரே. இந்த ஏழை முகத்தைப் பார்க்கமாட்டேன் என்று நீ தள்ளி விடுவாயானால் என் கதி என்ன? எங்கு சென்று என்னால் வாழ முடியும்? எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


 பாடல்: 10 

சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்

கொங்குடைய கொன்றைக் குளிர்ச் சடையாய் கோதை ஒரு

பங்குடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால்

எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே


***



நம்மிடம் எமன் வரும்போது (9)

 நம்மிடம் எமன் வரும்போது 

***********************************


மங்கையர்கள் தமது உலகியல் கோட்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவர்களது வலிமையான  செய்கைகள், என்னை காமத்தில் மயக்குகின்றன. ஏற்கெனவே நான் வஞ்சகனாக உள்ள நிலையில் என் கதி பரிதாபமானது. கொல்ல வேண்டும் என்ற எண்ணமுடன் எமன் (கூற்றுவன்) எச்சமயமும் வரக்கூடியவன். அப்படி வந்து விட்டால், அத்தருணத்தில் நான் என்ன செய்வேன்? எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


பாடல்: 9

புன்செய்கை மாறாப் புலைய மட மங்கையர் தம்

வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன்

கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்

என் செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே


**** 


நம் நெஞ்சம் புண்ணாவது எதனால்? (8)

 நம் நெஞ்சம் புண்ணாவது எதனால்? 

*******************************************


வந்த வினைகள் நாம் செய்வதால் ஏற்படுகின்றன. வரப் போகும் வலிய வினைகள் முற்பிறவி செயல்களால் வரப் போகின்றன. இதனால் நோய்வாய்ப்பட்டவன் ஓயாமல் நெஞ்சம் உழல்வது போல நெஞ்சம் புழுங்கி கவலைகளில் ஆழ்கின்றேன்.  புண்ணியா! கண்கள் போன்றவனே. உன் கருணை எனக்கு அளித்தால் என்னால் தப்பிக்க இயலுமே.எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


பாடல்: 8


உண்ணாடும் வல்வினையால் ஓயாப்பிணி உழந்து

புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே

கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க

எண்ணாயோ ஐயா  எழுத்தறியும் பெருமானே.

**

நம் எங்கிருந்து அழுகிறோம்? (7)

 


நம் எங்கிருந்து அழுகிறோம்? 

பாடல்:7

**********************


என்னைப் பிணித்த பிணிகள் என்னை விடவில்லை. வாடினேன் . துயருற்றேன்.  நெஞ்சம் அயர்ந்து போகிறது. உலகில் எத்தனைத் துன்பங்கள் இருக்கிறதோ அத்தனையும் கொண்ட கொடுமையான கடல் அளவுக்கு பரந்து விரிந்த துன்பப் பரப்பில்  விழுந்து அடியேன் தாங்க முடியாமல்  அரற்றி அழுகிறேன். நின் திருச்செவிக்கு என் அழுகை ஒலி ஏறாதோ என துயர் உறுகின்றேன். ஐயா எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே

கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்

ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்

ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.


**

Thursday, 23 July 2026

நமது அறிவின் திறம் எவ்வளவு? (6)

 நமது அறிவின் திறம் எவ்வளவு?

பாடல்: 6

********************

இந்த உலகில் எனக்கு தீமைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. நன்மை ஒன்றை கடுகளவும் செய்தது இல்லை. வீனாக நாட்களைக் கழிக்கின்றேன். வீண் வாதங்கள் புரியும் வஞ்சகனாக உள்ளேன். என் முற்பிறப்பின் வலிய வினைகள் வாட்டுகின்றது. உண்மையும் என்னிடத்தில் அறவே இல்லை.சூது வாது தான் தெரியும். திருமாலும் பிரம்மனுமே கூட எடுத்துச் சொல்வதற்கு எல்லையில்லாத புகழும் பெருமையும் கொண்ட ஐயா எனக்கு என்ன விதமாக அறிய இயலும்  ஐயா எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.


பாடல்:6

தீ தறிவேன் நன்கணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும்

வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்

சூதறிவேன் மால் அயனும் சொல்லறிய நின்பெருமை

யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே. 


***


நம் உடம்பு எப்படிப்பட்டது? (5)

 நம் உடம்பு எப்படிப்பட்டது?  

பாடல் : 5 

********************************************

எது நிலையானது இல்லையோ அதனை நேசிக்கிறோம். எத்தனை தடவை சொன்னாலும் உடம்பு நேசம் நாம் விடுவதில்லை. இது நம் நெஞ்சத்தின் மிகத் தவறான எண்ணம். இன்னும் சொல்லப் போனால் நோயான எண்ணம். சோர்வுற வைக்கும் இந்த எண்ணம் நம்மைத் தடுமாறச் செய்கிறது. ஆம் . வாழ்வில் ஒரு நாள் இந்த உடம்பு நிற்க முடியாமல் படுத்துவிடும். நில்லா உடம்பு என்பது இறத்தலைக் குறிக்கும். இந்த நமது நோயான எண்ணத்தை இந்த உலகில் யாரிடம் சொல்வது? யாவும் அறிந்த ஈசா , எழுத்தறியும் பெருமானே அருள்வாயாக.


நில்லா உடம்பை நிலையென்றே நேசிக்கும் 

பொல்லா நெஞ்சப் புலையனேன்  இவ்வுலகில்

சொல்லா மன நோயால் சோர்வுற்று அலையும் அல்லல்

எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.


நம்மை என்ன செய்ய வைப்பார் ஈசன்? ( 4)

 நம்மை என்ன செய்ய வைப்பார் ஈசன்? (4)

பாடல் : 4

***************************************

பொய் எல்லாம் மெய் என்றே தெரிவதால், விழிக்கு மை பூசிய கண்கள் கொண்ட பெண்களின் போகம்( புணர்முலையார் போகம்) எனக்குப் மிகப் பெரும் இன்பமாகத் தெரிகின்றது. மையல் வந்து உறுகின்றது. இந்த உணர்வுக்கே ஆட்படுவதால் இறந்து போவதும் நிகழ்கின்றது. அழியட்டும் இவன் என்றும்விடலாம். நீ காத்தருளவும் செய்யலாம். உன் சித்தம் எது? என்ன நடக்கும்? எனத் தெரியவில்லையே எழுத்தறியும் பெருமானே. அருள்வாயாக.


மைப்படியும் கண்ணார் மயல் உழக்கச் செய்வாயோ

கைப்படிய உன் தன் கழல் கருதச் செய்வாயோ

இப்படி என்று அப்படி என்று என் (ன) அறிவேன் உன் சித்தம்

எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே


***

நாம் நன்றி காட்டுகிறோமா?(3)

 நாம் நன்றி காட்டுகிறோமா?(3)

பாடல்:3 

*************************************

நன்றி அறிதல் நம்மிடையே இல்லை. முன்போ பின்போ நாம் சிறு அளவுக்கும் ஈசனை அறியாதபோதும் நமக்கு ஈசன் எதனால் பக்தியை அருள்கிறார்? ஆம். சிறு அளவு பக்தி நமக்குத் தோன்றுவதும் ஈசன் செய்கையே ஆகும். இதனை “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்ற வரிகளில் மாணிக்க வாசகப் பெருமான் சிவபுராணத்தில் நெகிழ்வது போலே இங்கு வள்ளல் பெருமான் நெகிழ்வது, நாம் குற்றம் உணர்ந்து திருந்தும் பொருட்டே ஆகும். 

இப்படிப்பட்ட பக்தி நெறி ஓர் நன்னெறி அதனில் என்னைச் சேர்த்ததை அறியா மூடனேன் நான். முட்டாள் நான்.  ஈசா எழுத்தறியும் பெருமானே உனக்கு என்ன கைம்மாறு ( பிரதி உபகாரம்) செய்வேன்? எனக்கு அருள்வாயாக என்கிறார் மூன்றாம் பாடலில்.


நன்னெறிசேர் அன்பர் தமை நாடிடவும்; நின்புகழின்

சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு

முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு

என் அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.


****

நாம் உண்மையில் யார்? (2)

 நாம் உண்மையில் யார்? (2)

பாடல்: 2 

*******************************

மத்து தயிரில் அலைகின்றது. ஆனால் அது சுவை அறியுமா? வஞ்சகனுக்கு நல்ல புத்தி வருமா? பைத்தியக்காரன் ஒருவனுக்கு வலிய நோயை  ஏற்கும் பண்பும் இருக்குமானால் அவன் கதி என்ன? பேயாக , நாயாக, வீண் நாள் போக்கும் என்னை உனது தாமரை போன்ற திருவடிக்கு ஆளாக்க இன்னும் எத்தனை  நாள் தேவைப்படுமோ. எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.

மத்தனை, வன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணி கொள்

பித்தனை, வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை

முத்தனையாய் உன் தன் முளரிதாட்(கு) ஆளாக்க

இன்னும் எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.

எழுத்தறியும் பெருமான் மாலை / நம் சரிவுக்கு காரணம் என்ன? (1)

 எழுத்தறியும் பெருமான் மாலை

#####################


திருவொற்றியூரில் வள்ளல் பெருமான் அருளியது.எழுத்தறியும் பெருமான் மாலை வள்ளல்பெருமான் அருளிய ஆறு திருமுறைகளுள் இரண்டாம் திருமுறையில்  பாடல் 905 முதல் துவங்குகின்றது. மொத்தம் 31 பாடல்கள். இவை நம் நெஞ்சம் உருக்கும் பக்தி சாறாகத் திகழ்வன. அன்போடு அம்மா என்று அழைத்தாலும் அர்த்தம் தெரியாமல் அழைத்தாலும் தாய் திரும்பிப் பார்த்து வாரி அணைக்கும் அன்பு கொள்வாள். குறை தீர்க்க  குழந்தையின் முகம் நோக்கி கனிவு கொள்வாள்.

நம் சரிவுக்கு காரணம் என்ன?

*****************************************


பாடல்:1

பொதுவாகப் பலர் தமது சரிவுக்கும் தாழ்வுக்கும் பிறரைக் குறை சொல்வது வழக்கம். வள்ளல்பெருமான் நெஞ்சம் அப்படி அன்று. 

ஒரு நாய் எவ்வாறு மனிதர்கள் புழங்கும் அங்காடியில் எந்தப்பயனும் இல்லாமல் ஒவ்வொரு கடையாக அலைகின்றதோ அது போல அலைகிறேன்  என்று பட்டினத்தார் சொல்வது போன்றே வள்ளல் பெருமான் சொல்லிச்செல்வது நம் பொருட்டே ஆகும். 

குற்றம் சாட்டப்பட்டவனுக்காக வாதாடும் வழக்குரைஞர் நீதிபதியிடம் வாதாடும்போது குற்றவாளிக்கு கிட்ட வேண்டிய நியாயத்திற்காக எவ்வாறு அந்தக் குற்றத்தைத் தானே செய்தது போன்று வாதாடுகிறாரோ, எழுத்தறியும் பெருமான் மாலையின் பாடல்கள் இருக்கின்றன.

உனது திருவடிக்கு ஆளாக வேண்டும் என்ற என்ணம் தவிர்க்கும் போக்கு எதனால் ஏற்பட்டது? முந்தை வினைகளே காரணம். இதனால் எனக்கு நோய் வந்தது. என்ன நோய்? பிறரால் நான் ஏசப்படும் நோய். இப்படி நிகழ்வது நீதியா? என் தந்தயான எழுத்தறியும் பெருமானே. அருள்வாயாக.


சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை

முந்தை வினை தொலைத்து உன் மொய் கழலுக்கு ஆள் ஆக்காதே

நிந்தை உறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ

எந்தை நீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.


*****