நமது அறிவின் திறம் எவ்வளவு?
பாடல்: 6
********************
இந்த உலகில் எனக்கு தீமைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. நன்மை ஒன்றை கடுகளவும் செய்தது இல்லை. வீனாக நாட்களைக் கழிக்கின்றேன். வீண் வாதங்கள் புரியும் வஞ்சகனாக உள்ளேன். என் முற்பிறப்பின் வலிய வினைகள் வாட்டுகின்றது. உண்மையும் என்னிடத்தில் அறவே இல்லை.சூது வாது தான் தெரியும். திருமாலும் பிரம்மனுமே கூட எடுத்துச் சொல்வதற்கு எல்லையில்லாத புகழும் பெருமையும் கொண்ட ஐயா எனக்கு என்ன விதமாக அறிய இயலும் ஐயா எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.
பாடல்:6
தீ தறிவேன் நன்கணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும்
வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
சூதறிவேன் மால் அயனும் சொல்லறிய நின்பெருமை
யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment