நம் அன்பின் அளவு எவ்வளவு?
***************************************
பலர் நினைக்கிறார்கள் ஈசன் மீது மிக பலமான அன்பு கொண்டிருப்பதாக. உண்மையில் நாம் நெஞ்சம் முழுதும் முட்கள் கொண்ட பெண்களையே நேசித்து கள்ளம் கொள்கிறோம். கிட்டத்தட்ட ஒரு நாயின் குணம். அல்ல. அல்ல. நாயாகவே கடைசியில் ஆகிவிடுகிறோம்.
உண்மையில் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது ஒருநாள் புரிய வருகிறது. நாம் உள்ள மட்டும், இந்த உடல் உள்ள மட்டும், நம் உள்ளம் உள்ள மட்டும் தனது அன்பர்களுக்கு உதவும் ஈசன் திருவடி மீது அன்பு செலுத்தி வாழ்ந்திருக்க வேண்டும். திருவடிப்பற்று நமக்கு எள் அளவு கூட இல்லையே எழுத்தறியும் பெருமானே, எனக்கு அருள் வயாக.
பாடல்: 26
முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க் குதவும் உன் தாட் கன் பொருசிற்
றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment