நம் நெஞ்சம் புண்ணாவது எதனால்?
*******************************************
வந்த வினைகள் நாம் செய்வதால் ஏற்படுகின்றன. வரப் போகும் வலிய வினைகள் முற்பிறவி செயல்களால் வரப் போகின்றன. இதனால் நோய்வாய்ப்பட்டவன் ஓயாமல் நெஞ்சம் உழல்வது போல நெஞ்சம் புழுங்கி கவலைகளில் ஆழ்கின்றேன். புண்ணியா! கண்கள் போன்றவனே. உன் கருணை எனக்கு அளித்தால் என்னால் தப்பிக்க இயலுமே.எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.
பாடல்: 8
உண்ணாடும் வல்வினையால் ஓயாப்பிணி உழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
**
No comments:
Post a Comment