நம்மிடம் எமன் வரும்போது
***********************************
மங்கையர்கள் தமது உலகியல் கோட்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவர்களது வலிமையான செய்கைகள், என்னை காமத்தில் மயக்குகின்றன. ஏற்கெனவே நான் வஞ்சகனாக உள்ள நிலையில் என் கதி பரிதாபமானது. கொல்ல வேண்டும் என்ற எண்ணமுடன் எமன் (கூற்றுவன்) எச்சமயமும் வரக்கூடியவன். அப்படி வந்து விட்டால், அத்தருணத்தில் நான் என்ன செய்வேன்? எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.
பாடல்: 9
புன்செய்கை மாறாப் புலைய மட மங்கையர் தம்
வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
என் செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே
****
No comments:
Post a Comment