நம் எங்கிருந்து அழுகிறோம்?
பாடல்:7
**********************
என்னைப் பிணித்த பிணிகள் என்னை விடவில்லை. வாடினேன் . துயருற்றேன். நெஞ்சம் அயர்ந்து போகிறது. உலகில் எத்தனைத் துன்பங்கள் இருக்கிறதோ அத்தனையும் கொண்ட கொடுமையான கடல் அளவுக்கு பரந்து விரிந்த துன்பப் பரப்பில் விழுந்து அடியேன் தாங்க முடியாமல் அரற்றி அழுகிறேன். நின் திருச்செவிக்கு என் அழுகை ஒலி ஏறாதோ என துயர் உறுகின்றேன். ஐயா எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.
மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
**
No comments:
Post a Comment