நாம் வெம்புவது எதனால்?
*********************************
மின்சாரம் போல் நோக்கும் பெண்களின் கண்கள் தரும் விருப்பத்தினால் மனம் வெம்புகின்றது. ஆசை வாட்டுகின்றது. ஆனாலும் ஈடில்லா உன் தாயுள்ளத்தால் பொன்போன்ற உன் திருவடி மீது தீரா விருப்பமாக என் மனநிலையை மாற்றி அருளினால் உலகில் எனக்கு சமம் யாருமில்லை எனும் நிலை அடைவேன். எழுத்தறியும் பெருமானே அந்நிலையை எனக்கு அருள் வாயாக.
பாடல்:13
மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்போல்வாய் என் ஈன்ற தாய் போல்வாய் சார்ந்துரையாப்
பொன் போல்வாய் நின் அருள் இப் போதடியேன் பெற்றேனேல்
என் போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment