யார் மிகப் பெரிய ஏழை?
***********************************
என் குற்றங்கள் அளவிட முடியாதன. அது தங்கத்தை மதிக்கிறது. ஆனால் பொன் போன்ற உன் திருவடி குறித்து போற்றுவதும் இல்லை. மனதினால் எண்ணுவதும் இல்லை. உலக வாழ்வு நிலை என மயங்கி எந்நேரமும் இயங்குகின்றது. வாழ்நாளெல்லாம் துன்பப்படும் ஏழை கூட , வயிற்றுப்பசி என்ற ஒரு துன்பத்தை மட்டுமே அடைகிறான். நானோ அந்த ஏழையினும் ஏழை. ஆம். எண்ணத்தால் உன் பொன்னடி போற்றாத ஏழை. என் எண்ணம் உயர்த்துக. உன் பொன்னடி போற்றச் செய்க. எழுத்தறியும் பெருமானே எனக்கு அருள்வாயாக.
பாடல்:19
பொன்னை மதித்தையா நின் பொன்னடியைப் போற்றாத
கன்னிகரும் நெஞ்சால் கலங்கின்ற கைதவனேன்
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய்
என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
************
No comments:
Post a Comment