நமது பாவப் பட்டியலில் எவை உள்ளன?
***************************************************
நான் என்னை மிக உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் என் பாவங்களின் பட்டியல் கையில் சிக்கியது. படித்துப்பார்த்தேன். காமம் (பெரும் பேய்) பட்டியலின் முதலில் இருந்தது. மையல் எனும் ஆசை, ஆணவம், பொய், பொறாமை, சினம், வஞ்சனை, கொலை ஆகியனவும் கண்டேன். இத்தனை பாவமும் செய்துள்ளேனே.எழுத்தறியும் பெருமானே எனக்கு இரங்குவாயாக.
பாடல்:29
பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
வித்தனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம்
கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.
***
No comments:
Post a Comment