Thursday, 23 July 2026

நாம் நன்றி காட்டுகிறோமா?(3)

 நாம் நன்றி காட்டுகிறோமா?(3)

பாடல்:3 

*************************************

நன்றி அறிதல் நம்மிடையே இல்லை. முன்போ பின்போ நாம் சிறு அளவுக்கும் ஈசனை அறியாதபோதும் நமக்கு ஈசன் எதனால் பக்தியை அருள்கிறார்? ஆம். சிறு அளவு பக்தி நமக்குத் தோன்றுவதும் ஈசன் செய்கையே ஆகும். இதனை “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்ற வரிகளில் மாணிக்க வாசகப் பெருமான் சிவபுராணத்தில் நெகிழ்வது போலே இங்கு வள்ளல் பெருமான் நெகிழ்வது, நாம் குற்றம் உணர்ந்து திருந்தும் பொருட்டே ஆகும். 

இப்படிப்பட்ட பக்தி நெறி ஓர் நன்னெறி அதனில் என்னைச் சேர்த்ததை அறியா மூடனேன் நான். முட்டாள் நான்.  ஈசா எழுத்தறியும் பெருமானே உனக்கு என்ன கைம்மாறு ( பிரதி உபகாரம்) செய்வேன்? எனக்கு அருள்வாயாக என்கிறார் மூன்றாம் பாடலில்.


நன்னெறிசேர் அன்பர் தமை நாடிடவும்; நின்புகழின்

சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு

முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு

என் அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.


****

No comments:

Post a Comment