Monday, 30 December 2024

 ஒன்றும் தெரியாதவை


சிந்திக்கிறேன் கூட்டத்தில்

சரியான கொசுக்கள் ஆறு மணிக்கு

உள்ளே வந்து கடிக்கின்றன

ஏன் மாலை ஆறு மணிக்கு  கடிக்கின்றன?

அவற்றுக்கு மாலை இது எனத் தெரியாது

கூட்டம் என்று தெரியாது

ஆறு மணி தெரியாது

கடிப்பதே தெரியாது

ஏன் என்று கேள்வி கேட்காது தெரியாது

தானொரு கொசு என அதற்கு தெரியாது

கொசு எனப் பெயரிட்டது கூடத் தெரியாது.



No comments:

Post a Comment