2. கொள்ளைக் கூட்டத்தினரை ஓடச் செய்தேன்
ஒரு முறை முல்லா தனது வீர தீர சாகசம் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நான் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பயங்கரமான கொள்ளைக் கூட்டத்தை பயந்து ஓடும்படி செய்திருக்கிறேன்” என்று பெருமை பேசிக்கொண்டார் முல்லா.
“நீங்கள் ஒரு ஆளாக எப்படி கொள்ளைக் கூட்டத்தினரை ஓடும்படி செய்தீர்கள்?”
“ அது மிகவும் எளிது. கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டு நான் பயந்து ஒடினேன். அவர்கள் என்னைப் பிடிப்பதற்காக பின்னே ஓடி வந்தனர்” என்று சாதுர்யமாக கூறினார்.
நீதி: எப்படி பயந்து ஓடினார்கள்? என்று கேட்டிருக்க வேண்டும். தவறிப்போய் வேறு கேள்வி கேட்டது போல் இன்றும் இப்படிப்பட்ட தம்பட்டங்கள் சொல்லும்போது நாம் சரியான கேள்விகளைக் கேட்காமல் பயம் சம்பந்தமாகவே கேட்கிறோம்.
****
No comments:
Post a Comment