ஒரு கவிதைத் தொகுப்பு உருவாக்கம் பெற பல மனத்தடங்கள் தாண்ட வேண்டும்.
வெளியாகும் நிலை ஏற்பட்டு பிறகு தவறிப்போனாலும் வர வேண்டும் என இருந்தால் அது வந்துவிடும். ஆம்.
பொன்வெளிப்பறவை கவிதைகள் புதுக்கவிதையின் முன்னோடிகளில் வானம்பாடி இயக்கம் சார்ந்த எஸ்.வைதீஸ்வரன் முன்னுரை கொண்டது என்பதை அன்போடும் மகிழ்வோடும் தெரிவித்து மகிழ்கிறேன்.
118 கவிதைகளில் வாழ்வின்நிலைபாடுகளை கூவல்களை அதனதன் அதிர்வோடு எழுதியுள்ளேன்.
"பொன்வெளிப்பறவை" எனும் கவிதை காவல்துறையை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து ; குடும்ப பாரம் மனோபாரம் வென்று கடமையைச் செய்வேன் என உணர்த்திய மனிதனின் பாதை.

No comments:
Post a Comment