வாசிப்பவர்களுக்கு ஒளவை சொன்ன மூன்று வேலைகள் என்ன?
*********************************
நாம் வாசிக்க நிறைய நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் எப்படி வாசிக்க வேண்டும் என்பது ஒளவையார் சொல்லியிருக்கிறார். முக்கியமாக எழுதுவர்கள் ஓராமல்தான் (எந்தப்பக்கம் எப்படி என்று கவனம் குவித்து கூர்ந்து) எழுதுவதில்லை என்பதை அவர் தமக்கே ஒப்புக்கொள்வது ஒளவையே அவையடக்கம் கருதி குறிப்பிடும்போது இன்று எழுதுவோர் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள்!
எழுதுவோர் கதி இப்படி இருப்பதால், வாசிப்போருக்கு சில டிப்ஸ் அன்றே தந்த நம் ஒளவையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஓராது எழுதினேன் ஆயினும் ஒண்பொருளை
ஆராய்ந்து கொள்வது அறிவுடமை - சீராய்ந்து
குற்றம் களைந்து குறை பெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.
நான் ஆராய்ந்து எழுதவில்லை. அறிந்தவற்றை எழுதினேன். ஆனாலும் நுட்பமான அர்த்தம் எதுவென ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்தல் அறிவுடையோர் கடமை.
அதன் சிறப்பு ஆராய்ந்து குற்றம் குறைகளை நீக்கி, நான் கூறாதவற்றை இடத்திற்கேற்ப நிரப்பி ( fill) அமைத்துப் படியுங்கள். அதுவே கல்வியில் சிறந்த மனிதர்களின் பொறுப்பு.
ஒளவையார் , படிப்பவர்களுக்கு சொன்ன மூன்று வேலைகள் என்ன?. எழுதுகிறவர்கள் அவர்கள் அறிந்ததை மட்டுமே எழுதி உள்ளார்கள் என்பது புரிந்துகொண்டு -
1) அதில் நுட்பம் எது என ஆராயும் வேலை வாசகனுக்கு உண்டு
2) சிறப்பானது எது என ஆராயும் வேலையின்போது குற்றம் குறை இருக்கத்தான் செய்யும் ; அதனை நீக்கி விடுக.
3) கூறாதன நோக்கி குறிப்பு அறிந்து அதனை நீங்கள் உங்கள் அறிதல் கொண்டு இட்டு நிரப்பிக்கொள்க என்பதை “குறை பெய்து” வாசித்தலும் வாசகனுக்கு உண்டு.அவனே கற்று அறிந்த மாந்தன்.
**
No comments:
Post a Comment