Thursday, 13 August 2026

மகாகவி காளிதாசனின் மேகதூதம் ( புதுக்கவிதை வடிவில்)

மனைவியுடன் கருத்துவேறுபாடு என்பது வேறு.ஆனால் பிரிந்திருக்கும் கொடுமையில் அனுமனைத்தூது அனுப்புகிறார் இராமபிரான். இங்கே அதனைக் காவியச்சுவை கொண்டு ஏற்றம் பெற வைக்கும் காளிதாசனின் உவமைகள் பெரும் சக்தி கொண்டவை.
மனைவியைப்பிரியும் முதல்நாள் முன்பாக அவளுக்கு தலைமுடி வாரி சிக்கெடுத்து விட்டேன்.குபேரன் அளித்த சாபத்தின் முடிவில் எப்படியும் மனைவியின் கூந்தலுக்கு சிக்கெடுப்பேன் என மேகத்திடம் கூறும் காட்சி உட்பட எளிய நடையில் வாசிக்க முடிகிறது. அவளைச்சந்திக்க மேகத்திடம் தூது அழகு.
மாகாளம்,ஹரித்துவார் வழியாக செல்லும் மேகத்திடம் மழை பொழிந்து குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்கச் சொன்னது இப்போதும் காளிதாசர் மக்கள் கவி என எண்ண வைக்கிறார்.
வாசிக்க ரசிக்க எளியநடை.
****
மகாகவி காளிதாசரின்
மேகதூதம்( புதுக்கவிதை வடிவில்)
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:104+2
விலை:₹120
கழிவு:20% உண்டு
G pay: 9698009614





No comments:

Post a Comment