பகவான் இரமணர் பாடல் : 24
*******************************************
கொடியிட்டு அடியரைக் கொல் உனைக் கட்டிக்
கொண்டு எங்ஙன் வாழ்வேன் அருணாசலா.
அடியார் என ஆகிவிட்டதால் ஈசனின் அருளாகிய வெற்றிக்கொடி நாட்டப்பட்டதால் ஆணவம் போய்விட்டபிறகு, ஜீவபோதம் எனக்கு எப்படி தலைதூக்க முடியும்? (எம்.எஸ்,சந்திரசேகர் உரை/ பக்:20).
பாடல்; 56 / அபிராமி அந்தாதி:
அம்பிகையின் அருளாகிய இரக்கம் ஒன்றாய் இருந்து பலவாய் விரிகிறது.விரிந்துகொண்டே உள்ளது. பிரபஞ்சம் முழுதும் விரிந்து விட்டாள். அதனைத் தாண்டியும் போகமுடியும். அங்கேயே நின்றாள். நைத்தும் அவள் இல்லாதது போலவும் தோன்றச் செய்கிறாள். அருவமாய் நிற்கவும் முடியும்.
இப்பாடல் பகவான் இரமணர் பாடலோடு ஒப்பிட்டு நோக்க பொருத்தமானது. அருள் மயமான அம்பிகை ஆட்சியில் வாழும் எண்ணம் ஏற்படும்.
***
No comments:
Post a Comment