முல்லா கதைகள்: 7
***********
ஒரு சமயம் ஒருவர் முல்லாப் பார்த்து “ விதி என்பது என்ன?” என்று கேட்டார்.
“ நாம் எதிர்பார்ப்பதற்கு எதிராக நடப்பதுதான் விதி” என்றார் முல்லா.
அவர் சொன்ன பதில் புரியாததால் “கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்” என்று கேட்டார்.
“ ஒரு காரியம் வெற்றி அடையும் என எதிர்பார்த்து தோல்வி அடைந்தால் அதை விதி என்றும்; ஒரு காரியம் தோல்வி அடையும் என எதிர்பார்த்து வெற்றி அடைந்தால் அதனையும் விதி என்று சொல்கிறீர்கள்.. அதாவது எதிர்பார்த்தது நடைபெறவில்லை என்றால் நாம் தரும் பெயர் விதியாகும்”
நீதி: முல்லாவின் விளக்கம் சரியே. மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற பாதைக்கு செல்வதில்லை. விதி மீது பழி போடுதல் எளிது.
>>>
No comments:
Post a Comment