Thursday, 13 August 2026

மனக்கவலை தீர்க்கும் 101 டாக்டர்கள்

திரிகடுகம் என்பது கடைச்சங்க நூல்.
ஒவ்வொரு வெண்பாவும் உடல்பிணி நீக்கும் சுக்கு,மிளகு,திப்பிலி போல 3 வரி அளவுடன் ; உயிர்ப்பிணியாகிய அறியாமை அகற்ற சொல்லப்பட்ட பாடல்கள்
இவை 101ம் தமிழ் சமூகத்தின் உடல்,மன நோய் தீர்க்கும் 101 டாக்டர்கள் என்கிறார் நூலாசிரியர்.
உதாரணமாக, நுண்ணிய நூல்பல கற்றவர்களின் பண்பு குறித்து நம்மைக் கேட்டால் பதில் தெரியாது. ஆனால் , திரிகடுகத்தால் முடியும்.
பாடல்:29
"பெண்விழைந்து பின்செலினும் தன்செலவில் குன்றாமை;
கண்விழைந்து கையுறினும்
காதல் பொருட்டின்மை;
மண்விழைந்து வாழ்நாள் மதியாமை
இம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு"
பெண்களை விரும்பிச் சென்றாலும் தனக்குரிய ஒழுக்கம் குறையாமை; தன்னை விரும்பினாலும் உலகப் பொருள்கள்மீது காதலின்மை; மனை,வீடு விரும்பி வாழ்நாளை விரும்பாமை - இந்த மூன்றுமே அடையாளங்கள்.
**
மனக்கவலை தீர்க்கும் 101 டாக்டர்கள்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:116+2
விலை:₹130
கழிவு:20% உண்டு
G pay:9698009614




No comments:

Post a Comment