Thursday, 13 August 2026

திருவாசகம் எனும் தேன்

 மாணிக்கவாசகர் அன்றைய தழிழக முதலமைச்சர். தென்னவன் பிரம்மராயன் பட்டம் பெற்றவர். திருவாசகம் கற்க கற்க உடம்பு தேனாகும்.

51 பாடல்வகைகளில் 565 பாடல்கள். ஏன்565 எண் ? வாழ்வெனும் ஆறு கடக்க இக்கரை விட்டு அக்கரை ஏற உயிர் அஞ்சுகிறது. இக்கரையும் அஞ்சுகிறோம்.ஆறு கடந்தபின் என்னாகுமோ அக்கரையிலும் பயம் என அஞ்சுதல் குறித்தது 565.
என்னை அஞ்சல் என்பார் யார் ஈசா என்று வழிசொன்ன திருவாசகம் ஆன்ம விடுதலைக்கு வழி.
அனுபவ வழி அறியாமை என தில்லையில் பாடி அருளிய அச்சோ பதிகத்துடன் (51) நிறைவாகும் திருவாசகத்தில்-
"திருச்சதகம்" பகுதியில் நாய் என்று வருகிறது. இதுபோல 59 இடங்களில் மணிவாகப்பெருமானார் தன்னை நாய் என்று ஏன் குறித்தார் என்பதை ஆராய்கிறது பா.சத்தியமோகனின் இந்நூல்.
"காணும் ஆறு காணேன்;உன்னை அந்நாள் கண்டேனும்
பாணே பேசி
என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்ஜோதி
ஆணே பெண்ணேஆர்அமுதேஅத்தா செத்தே போயினேன் ஏண்நாண்இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே.
திருவாசகம் எனும் தேன்
பா.சத்தியமோகன்
புஸ்தகா டிஜிடல் வெளியீடு
பக்:146+2
விலை:₹170
கழிவு:20% உண்டு
G pay:9698009614





No comments:

Post a Comment