Wednesday, 12 August 2026

முல்லா கதைகள் 13.8.26 **************************

 முல்லா கதைகள் 13.8.26

**************************

நல்ல செய்தி யாருக்கு? 

******************************

 ஒரு நாள் சந்தி கூடும் இடத்தில் முல்லா வந்து நின்று கொண்டார். அங்கே நல்ல சேதி சொல்வோருக்கு விலை மதிப்புடைய பொருட்களை பொதுமக்கள் அளிப்பது வழக்கம்.

பொதுமக்களே உங்களுக்கு  ஒரு நல்ல சேதி சொல்லப் போகிறேன், எனக்குப் ப்ரிசு தருவதற்கு காசுகள் திரட்டுங்கள் என்று கூறினார்.

ஆளுக்கு கொஞ்சம் காசுகள் திரட்டி முல்லாவிடம் கொடுத்தனர். பெற்றுக்கொண்டார். ஆனால் நல்ல சேதி ஏதும் கூறவில்லை.

கூட்டத்தில் ஒருவர் நல்ல சேதி சொல்ல நினைவுபடுத்தியும் சொல்லவில்லை.

பிறகு முல்லா தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.

“ பொதுமக்களே ! உங்களுக்கு நற்சேதி! உங்கள் முல்லா ஒரு குழந்தைக்குத் த்ந்தை ஆகி உள்ளார்!” என்று கூறினார்.

 நீதி: இந்தக் கதையில் வருபவர் போல ஏமாற்றுதல் அப்பட்டமாய் இன்றும் நடக்கிறது.  நம்பிக்கையை ஏற்படுத்து. காசு பெறு. கூட்டம் திரட்டு. ஆர்வத்தை ஏற்படுத்து. நல்ல சேதி என்று தலைப்பு கொடு. உனக்கு நடந்த எதையாவது சொல்லிவிட்டு நகர்.


No comments:

Post a Comment