பாடல்:20
********
அம்மி துணையாக ஆறுஇழிந்த ஆறுஒக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
**********
மனிதர்களே
ஒருவன் அம்மைக்கல்லைக் கொண்டு படகு செய்கிறேன் என்று சொன்னான். எதற்கு என்றேன். ஆற்றைக் கடக்க இந்த அம்மிக்கல்லில் ஏறி அமர்ந்து கொள்வேன், அது என்னை மறுகரை சேர்க்கும் என்றான்.
அம்மிக்கல்லை நம்பி ஆற்றினை கடக்க நினைக்கும் அடிமுட்டாள்தனமும் ; கொம்மை முலை கொண்ட விலை மாதர்கள் பகிரும் இன்பத்தோடு கூடிய கொண்டாட்டமே வாழ்வாக இருக்கும் என்று நினைப்பதும் ஒன்றே. ( கொம்மை முலை : திரண்ட முலை) .
அவர்களோடு வாழ்வதும் பொழுதுபோக்குவதும் இந்தப் பிறவியில் உங்கள் பணம் எவ்வளவு இருப்பினும் அத்தனைப் பெரும் செல்வத்தையும் அழிக்கும்.
மறுபிறவியில் வறுமை தொடர்வதற்கும் விதைபோல தொடரும் செயலே கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக செல்வம் அழிப்பது விலைமாதர் தொடர்பு என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
No comments:
Post a Comment