Sunday, 4 January 2026

நல் வழி - 19

 பாடல்:19

********************


சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம். 


******************


மனிதர்களே

நாம் நம் உடம்பில் எந்த உறுப்புக்காக அதிகம் நம் வாழ்நாள் கழிக்கிறோம்?என்று யோசித்திருக்கிறீர்களா?

வணங்குகிறோம். சேவிக்கிறோம், எதற்காக? அதன் இறுதி  பயன் என்ன?

தெளிந்த நீரைக் கொண்ட கடலையும் தாண்டிக் கடக்கின்றோம்?அதன் இறுதிகட்ட பயன் என்ன?

பிறரைப் பெரியவராக பாவிப்பது எதற்காக? அதன் இறுதிகட்ட பயன் என்ன?

உலகத்தையே ஆளத் துடிக்கிறோம். அதன் இறுதிகட்ட பயன் என்ன?

பாடல்களை இசைக்கிறோம். அதன் இறுதிகட்ட பயன் என்ன?

நாம் நம் உடம்பில் எந்த உறுப்புக்காக அதிகம் நம் வாழ்நாள் கழிக்கிறோம்?என்று யோசித்தால் வயிற்றுப்பாட்டுக்காகத்தான்  என்பது புரியும். பசி. பசி. வயிற்றுப் பசியின் கொடுமையால் நாழி அரிசி வேண்டியே ( படி அரிசி) உலகில் இவ்வளவு காரியமும் செய்கிறோம்.

ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக  பசி பற்றிய ஆழமான சிரமம் நம்மை பிறப்பிலிருந்தே இயக்கி வருகிறது என அறிந்தோம். 

விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.


No comments:

Post a Comment