பாடல்:18
*****************
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.
****
மனிதர்களே
பொருள் கேட்டால் உடனே கிடைத்துவிடும் என்று நினைக்கிறீர்கள். சரணம் செய்து கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். அதிர்ச்சி அடையாதீர்கள். இது உண்மை. ஆம். இது உண்மை.
பொருள் பெற்றவர்களும் சரி, உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி , பொருள் தர மாட்டார்கள். இந்தப் பேருலகில் சுற்றத்தினர் உதவுவார்கள் என்றும் நினைக்காதீர்கள். அதுடன் உலோபிகளும் அப்படித்தான். பொருள் இல்லை என்றே சொல்வார்கள்.
அவசியமான நேரத்தில் நாம் கேட்கும் உதவியைச் செய்யாதவர்கள் இரணம் செய்து காயப்படுத்தினால் தருவார்கள். காயம் வர உதைத்தால் பொருள் தருகிறார்கள்.
அணுகி குறையைச் சொன்ன அளவிலேயே சான்றோர் உதவுவார்கள். கரும்பு போல அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவார்கள். இதௌ பற்றி “கயமை” அதிகாரம் குறள்:1078 இவ்வாறு கூறுகிறது:
“சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப்பயன்படும் கீழ்”
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பொருள் உதவி பெறுதலின் சிரமம் எதுவென அறிந்தோம். விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
No comments:
Post a Comment