நான் ஒளவை பேசுகிறேன் (2)
பாடல் (1)
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
ஏ மனிதர்களே! நீங்கள் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள். மகிழ்ச்சி. அது ஏழைப்பையன் கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதாகவோ ; பேருந்தில் கூட்டத்தில் உங்கள் அமரும் இடத்தை எழுந்து அவர்களை அமரச் செய்ததோ; அன்ன சத்திரம் கட்டுவதோ இருக்கலாம். அப்போது மனம் என்ன எதிர்பார்க்கிறது? அந்த உதவிக்கு பதில் உதவி - பிரதி உதவி - என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தயவு செய்து விட்டுவிடுங்கள். ஆம்.
நான் ஒரு தென்னை மரத்தைப் பார்த்தேன்( தெங்கு) .
அந்த மரத்திற்கு ஒருவர் வேரில் நீரை ஊற்றினார். அதன் தாள் (வேர்) அந்த நீரை ஏற்றுக்கொண்டது.
ஆனால் அந்த தென்னைமரம் நீர் வார்த்தவருக்கு பதில் நன்றியாய் மீண்டும் வேரினாலேயே தரும் என்று நீர் வார்த்தவர் நினைக்க முடியுமா?
தாளில் குடித்து தலையாலே ( மர உச்சி) தருகிறது.
பல மடங்கு - உயர்ந்த விதத்தில் அந்த உதவி திரும்பி வரும் என்பது உண்மை.
நம்புங்கள் மனிதர்களே. இது உண்மை.
( ஈசனால் தொடர்வோம்)
No comments:
Post a Comment