சந்த்யாவந்தனம்: (16) 14.12.25
********************************************
சந்தியாவந்தனத்தின்போது செய்ய வேண்டிய க்ரியைகளின் விளக்கம் பார்ப்போம்.
ஆசமனம்:-
நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதேபோல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. நமது உள்ளமும் உடலும் சுத்தமாவதற்கு ஆசமனம் அவசியம்; அங்க வந்தனம் அவசியம் என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணரவேண்டும். உத்தரணியில் ஜலம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு கட்டைவிரலின் அடிபாகத்தால் விடப்படும் ஜலம் பிரம்மதீர்த்தம் எனப்படும். மூன்றுமுறை மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி, எச்சில்படாமல் உட்கொள்ள வேண்டும். உணவுக் குழாய்க்கும் போதுமான ஜலம் செல்ல வேண்டும்.
பிராணயாமம் என்பதன் விளக்கம் என்ன?
( ஈசனால் தொடர்வோம்)
No comments:
Post a Comment