அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும்
அருளியவர் : பகவான் ரமணர்
பாடல் : -1
அருணாசலம் என அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா
“அகம்” என்ற சொல்லின் இரு அர்த்தங்களை அழகுறப் பயன்படுத்தி இமயமலையை கண்ணாடி தாங்குவதுபோல பகவான் ரமணர் அமைத்த முதல் பாடல் இது.
“அகம்” என்பது உட்பகுதியைக் குறிக்கிறது. “அகந்தை” என்பதும் குறிக்கிறது. அகந்தைக்கிழங்கு என்று சித்தர் பாடல்கள் பேசும். அருணாசல எனும் ஐந்தெழுத்து குறித்து மனிதன் நினைக்க ஆரம்பித்தால் அகந்தை அழியும் .
“மன்” - என்றால் நினைப்பது அதனால் மனிதன் என வந்தது.
அபிராமி அந்தாதி பாடல்:71 ல் மனதை நெஞ்சம் என வருணித்திருப்பார் அபிராமிபட்டர்.
“இழவுற்ற நெஞ்சே இரங்கேல் உனக்கென் குறையே”
நெஞ்சம் தனது நிலை விட்டு இறங்கிக்கொண்டே இருக்கும். அல்லது தன்னை நோக்கி இரங்கிக் கொண்டேயும் இருக்கும். சுய பச்சாதாபம். Self pitty.
அதனை “இறங்கும்போது” அவ்வப்போது உயர்த்த வேண்டியிருக்கிறது.
“இரங்கும்போது” அபிராமி அம்மையை நினைப்பதும் கொள்வோம்.
செம்மறிக் கூட்டத்தில் வளரும் சிங்கக் குட்டி நம் மனது. உனக்கு என்ன குறை? நீ இப்படி வருந்த வேண்டாம். அபிராமி எல்லையற்ற கருணை கொண்டவள் இருக்க என்ன குறை என்று மனதைக் கேட்க வேண்டும்.
***
No comments:
Post a Comment