சந்தயா வந்தனம் விளக்கம் / பகுதி : 2
30.11.2025
ஈசா வாக்ய உபநிஷத் என்ன சொல்கிறது? என்ன பிரார்த்னையை முன் வைக்கிறது?
மனிதன் எதைக் காண ஆசைப்பட்டு தனது எண்ணங்களை அமைக்க வேண்டும் என அது சொல்கிறது? அது சூரியனை நோக்கி அருளக் கேட்பது இதனைத்தான் இதுதான்:
“பொன் வட்டில் போன்ற உன் பிரகாச வடிவத்தால் உனக்குள் இருக்கும் சத்தியத்தின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. சத்தியத்தை நாடும் என்னுடைய பார்வைக்கு நீ அந்த மறைப்பை நீக்கி அருள்வாயாக. உன் கிரணங்களைச் சுருக்கி உள் வாங்கிக்கொள். உன்னுடைய உத்தமமான மங்கள வடிவம் எதுவோஅதை நான் பார்க்கும்படி அருள்வாய்”
தாயுமானவர் வரிகளில் அது இவ்விதம் புரிந்துகொள்ளப்படலாம்:
“ஓராதே!
ஒன்றையும் உற்று உன்னாதே!
நீ முந்திப் பாராதே!
பார்த்தானைப் பார்”
- இவ்வரிகள் நமக்கு என்ன சொல்கின்றன? எண்ணங்கள் அலைபோல் வந்து கொண்டிருக்கின்றன. பெரிய அலை இது என ஓடுவோம். துரத்துவோம். துரத்தினால் அச்செயல் நாம் முந்திக்கொண்டு பார்த்த செயல் ஆகும். ஆனால் அலைகளை ஆரம்பிக்கிற இடம் ஒன்று உள்ளது. அலைகளை அனுப்புகிறவர் யார் எனப் பார்ப்பதே “பார்த்தானைப் பார்” என்ற வரியின் அர்த்தமாகும்.
( தொடர்வோம்/ 30.11.2025)
No comments:
Post a Comment