பாடல்:29
************
மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்து அழைப்பார் யாரும் அங்கு இல்லை - சுரந்து அமுதம்
கற்றாதரல் போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்.
மனிதர்களே.
இந்த உலகத்தில் நமக்கென சொந்தம் பாராட்ட ; அன்பு காட்ட யாரும் இல்லை என்று ஏதோ ஒரு கணம் நீங்கள் வருந்தியிருக்கலாம்.
அதோ பசு மாட்டைப் பாருங்கள். கன்று குட்டிக்கு அதனை “பால் கொடு” என்று யாரும் கட்டளை இடவில்லை. அதுவே சுரந்து அளிப்பது போல உங்களிடம் உள்ள செல்வத்தை பிறருக்கு அள்ளிக்கொடுக்கத் துவங்கினால்-
மரத்தின் பழங்கள் பழுத்துவிட்டால் எப்படி அந்த மரத்தினை நோக்கி வாருங்கள் என்று வெளவாலை யாரும் அழைக்காமலே வருவதுபோல -
உலகம் உங்களை நோக்கி வரும். இவர் எனக்கு உற்றார் இவர் எமக்கு உறவினர் என்று சொல்லவும் பேசவும் ஆரம்பிக்கும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக செல்வம் கொடுக்க கொடுக்க சுற்றத்தினர் பெருகுவர் என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 30
****************
தாம்தாம் முன் செய்தவினை தாமே அனுபவிப்பர்
பூந்தாமரையோன் பொறி வழியே - வேந்தே !
ஒறுத்தாரை என்செயலாம்? ஊரெல்லாம் ஒன்றா (க)
வெறுத்தாலும் போமோ விதி.
அரசே!
செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் பொறி (விதி) வழியே, அவரவர்கள் தாம் செய்த முன்வினையின் பயனை தாமே அனுபவிக்கிறார்கள். ஒறுத்தாரை ( தீமை செய்தாரை) என்ன செய்ய முடியும்? ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி வெறுப்பு காட்டினாலும் விதி போவதில்லை. அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக முற்பிறப்பில் செய்தவினை மிகவும் வலிமை உடையது என அறிகிறோம். அதனைச் செய்தவர் அதனை அனுபவித்தே தீர வேண்டும் எனவும் புரிகிறது.
எல்லோரும் ஒன்று கூடி அந்த விதியை எதிர்த்தாலும் விதி மாறப்போவதில்லை என அறிந்தோம்.

**
பாடல் :31
*******************
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சால
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் ; பழிக்கு அஞ்சாத
தாரத்தின் நன்று தனி.
மனிதர்களே.
சில விஷயங்களில் ஒன்றைவிட ஒன்று மேல் என்று நினக்கிறோம்.
பிழையுடைய பாடலை ஒருவர் பாடக் கேட்பதை விட, சொற்கள் இல்லாத இசையே நல்லது. அதுவே போதுமானது. அர்த்தமுள்ள வரிகளே வாழ்க்கை, அதன் துணையே இசை.
உயர்ந்த குடும்பத்தில் பிறந்தோம் என்பார்கள். அதைவிடவும் ஒழுக்கம் எவ்வளவோ நல்லது. நல்ல பண்புகள் இல்லாமல் பழக்க வழக்கம் கோட்பாடுகள் இல்லாமல் உயர்ந்த குடும்பம் என்ற பெயரால் யாருக்கு என்ன பயன்?
எளியவரைத் துன்பம் செய்யும் வீரத்தைவிட, தீராத நோயுடன் இருப்பது நல்லது. எளியோரை வாட்டுவதை வீரம் என்று நினைப்பது மிகவும் தவறு. அந்த குணம் நோய்த்தன்மை உடையது.
பழிக்கு அஞ்சும் குணமே பெண்களின் கற்பு நிலை போற்றப்படுவதன் வேராகும். அதனால், ஆண்களும் உயர் நோக்கம் பெற்று வாழ்வார்கள். என்ன தவறும் செய்வேன், உடை, பேச்சு, உறவினர் போற்றுதல், சமையல் கற்றல், வீட்டு வேலைகள் என எந்தக் கட்டுப்பாடும் கொள்ளாமல் வாழ்வேன் என்ற நிலையில் பிறர் சுட்டிக்காட்டுவார்கள். அந்தப் பழிச் சொல்லுக்கும் அஞ்ச மாட்டேன் எனும் மனைவியோடு வாழ்வதைவிட, தனியாக வாழ்வது நல்லது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் மூலமாக, எதை விட எதன் மதிப்பு சிறந்தது என்ற சிந்தனை சுட்டப்பட்டது.

பாடல்: 32
**************************
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.
மாநிலத்து மனிதர்களே.
உங்கள் உயிரின் உள் தன்மை , உயர்ந்து சிறப்படைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் பதில் “ஆம்” எனில், உலகில் வாழும் நீங்கள் இல்லாதோருக்கு வறியவருக்கு சோறிடுங்கள். தண்ணீரும் குடிக்கக் கொடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் தருமமே நற்செயலே உங்கள் உயிருக்குத் துணையாகும்.
இவ்வாறு செய்வதற்கு தேவையான பண நிலை, செல்வநிலை இப்போது இல்லை. நல்ல நிலைக்கு வந்தபின் அன்னதானம் செய்கிறேன் என்கிறீர்களா? அது நடக்கப்போவதில்லை. ஏன்? ஆற்று வெள்ளத்தால் உண்டான மேடும் பள்ளமும் போல செல்வமானது வளர்வதும் கரைவதுமாகத்தான் இருக்கும் என்பதால் இன்றே சோறும் நீரும் தரும் துவக்கம் இன்றே கொள்க.
முயன்றால் முடியும். பணத்தால் முடியாத நிலையிலும் கருணையால் அதனைச் செய்ய இயலும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக, வறியவர்களுக்கு சோறும் நீரும் அளிக்கும் தருமச் செயல் ஒன்றே நமது உள் உயிர் விரிவு செய்யும் என அறிகிறோம்.

பாடல்: 33
************************
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டு உருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
மனிதர்களே
இந்த உலகில் இனிமையான சொற்களின் வலிமையை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
கடுமையாகப் பேசும் சொற்களால் மென்மையான சொற்களை வெல்ல முடியாது என்பதே உண்மை. ஆம். வெட்டனவை மெத்தனவற்றை வெல்லாது.
யானை மீது ( வேழம்) பட்டு ஊடுருவி யானையின் சதையைக் கிழித்து ரத்தம் பீறிட வைக்கிற அம்பினால் பஞ்சில் பாய்ந்து காயம் உண்டாக்குவதில்லை.
இரும்புப் பாரையால் ( கடப்பாரையால்) பாறையை பிளக்க முடியாது. பசுமையான வேர்களுக்கு பாறை பிளந்துவிடும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக மென்மையின் சக்தி புரியவைக்கப்பட்டு இனிய சொற்களின் சக்தி அறிகிறோம்.

********************************************************************************************
பாடல்:34
******************
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்று எடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.
மனிதர்களே.
கல்வி அறிவு உள்ளவனா இல்லையா என்று உலகினர் பார்ப்பதில்லை. அவனிடம் பணம், செல்வம் உண்டா என்று பார்க்கிறார்கள். அவனை எதிர்கொண்டு வரவேற்கவும் செய்கிறார்கள்.
பணம் இல்லாதவனை மனைவியே வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். ஈன்று எடுத்த என்று ஏன் சொல்கிறார்கள்? ஆடு மாடு போடும் கன்றுகளுக்குதானே “ஈனுதல்” என்ற சொல்லாட்சி வரும்? ஆம். இன்னார்தான் பிறப்பார் என்று தெரியாமையால் ஈனுதல் என்பதே பொருத்தம். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும் ஈன்றது குறிக்கும் குறள் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கிறார்:-
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”
பணம் இல்லாதவனை இல்லாள் முதலிலேயே சொல்லிவிடுகிறாள். அன்னை இரண்டாவது இடத்தில் மகனை வேண்டாம் என்று சொல்லக்காரணம், மகனுக்காக சம்பாதிக்க அவகாசம் அளித்துப் பார்த்துவிட்டு அதன்பிறகும் சம்பாதிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்வாள்.
பணம் இல்லாதவன் வாய்ச்சொல்லுக்கும் மதிப்பிருக்காது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பணத்தின் சக்தி அறிகிறோம்.

**********************************************************************************************************
பாடல் :35
****************
பூவாதே காய்க்கும் மரமுமுள ; மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்து எனவே பேதைக்
குரைத்தாலும் தோன்றாது உணர்வு.
மனிதர்களே.
நீங்கள் உம்முடன் பழகுபவர்களில் இரு வகை மனிதர்களைக் காணலாம்.
குறிப்பறிந்து உங்களுக்குத் தேவையானதை செய்பவர்கள். இவர்கள் முதல் வகை. அவர்களிடம் நீங்கள் எதுவும் ஏவத் தேவை இருக்காது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பூ, பிஞ்சு, காய், பழம் எனும் நிலைகளில் பூக்காமலே நேரடியாக காய்த்துவிடும் தாவர வகை போன்றவர்கள்.
இன்னொரு வகை மனிதர்கள். வாய் திறந்து குறைகளைச் சொன்னாலும் உணராத தன்மை கொண்டவர்கள். மீண்டும் மீண்டும் கூறினாலும் பயன் இருக்காது.எந்த உணர்வும் அவர்களுக்கு வருவதில்லை. மூடர்களாகிய இவர்களை எதனுடன் ஒப்பிடுவது? நன்றாகத் தூவி விதைத்தாலும் முளைக்காத தாவரங்கள் போன்றவர்கள் என்று கூறலாம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக மனிதர்கள் வகை அறிகிறோம்.

*** *********************************************************************************************
பாடல்: 36
*********
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங்காலத்தில்
கொண்டகரு அழிக்கும் கொள்கை போல் - ஒண்டோடீஇ
போதம் தனம் கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
ஒண்டோடீ இ !
(ஒளி மிக்க வளையல்களை அணிந்த பெண்ணே கேட்பாயாக)
நண்டு அழிவது எப்போது தெரியுமா? அதன் குஞ்சுகள் பிறப்பால்!
சிப்பி அழிவது எப்போது எனில், அதன் முத்துகள் பிறப்பால்!
வேய் ( மூங்கில்) அழிவது அதன் அரிசியால்!
கதலி ( வாழை) அழிவது எப்போது எனில், அது ஈனும் குலையால்!
இவை எல்லாம் எதற்காக சொல்கிறேன் ? அவை கொண்ட செயல்கள் அவற்றை விருத்தி செய்வதில்லை. அழிக்கின்றன.
அறிவிலும், உணர்விலும் , பணத்திலும், கல்வியிலும் சிறந்தவர்கள் அழியும் காலம் ஏற்படுமானால் ; அவர்கள் அழிவு எப்போது ஆரம்பம் எனில், பிற பெண்கள் மீது வைக்கும் தவறான ஆசையே அழிவின் ஆரம்பம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக அழியும் வகை சுட்டப்பட்டது.

**************************************************************************************
பாடல்: 37
***********
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்துமில்லை - நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க்கு இல்லை விதி.
மனிதர்களே.
முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனை, செயல்களின் பயனை வெல்வதற்கு வெற்றி கொள்வதற்கு வழி ஏடு எங்கும் இல்லை. வேத நூல்களிலும் சொல்லப்படவில்லை. என்ன நினைத்தும் கவலைப்பட வேண்டாம்.
கண் எதிரே வினைப்பயனை அனுபவிக்கும் நம் நெஞ்சை நாம் வருத்தப்பட விடக் கூடாது.
மோட்ச வீடாகிய முக்திப் பேறு அடைவதற்காக தவம் முயல்வாரை இந்த முற்பிறப்பு விதியால் ஒன்றும் செய்ய இயலாது.
“தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுட்பட்டு”
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக தவத்தின் உயர்வை அறிகிறோம்.

***************************************************************************************************************************
பாடல்: 38
***********
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்ற நிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
மனிதர்களே
இருப்பது ஒரே பொருள்தான். அதுதான் எல்லாமும். ஆம். நாமோ எல்லாவற்றிலும் இரண்டாகப் பிரித்து பேதம் பார்க்கிறோம். இரண்டல்ல என்பதே அத்வைதம். அதை அறியாமல் நாம் எல்லாமும் இரண்டாகப் பிரிக்கிறோம்.
ஜீவாத்மா x பரமாத்மா ,
நல்லது x கெட்டது,
நான் x அவன்,
இல்லை x உண்டு என்று பேசிக்கொண்டுள்ளோம்.
உதாரணம் வேறு எதுவும் தேவையில்லை. கோரைப் புற்களை அறுத்தவர், அந்தப் புற்களைக் கட்டுவதற்கு அந்த புல்லையே பயன் படுத்த முடியும் என்பதை அறிவதில்லை. கயிறு தேடிக்கொண்டு அலைவார்கள். அதுபோல், இறைவனை வெளியில் தேடுவதும் அறிவற்ற செயலாகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக வாழ்வின் மேலாம் பரம் பொருளின் ஒருமை அறிகிறோம்.

**************************************************************************************************
பாடல்:39
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒரு பொருளை
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங்
கலையளவே ஆகுமாம் ; காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
***********************************
மனிதர்களே.
ஒருவன் தனது முப்பதாம் வயதிற்குள் விடவேண்டியன மூன்று.
அவை என்ன?
காமம் (விருப்பு); வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை); இந்த மூன்றையும் விடுவதனால், பெற வேண்டிய ஒரு பொருள்,பரம்பொருள். அதுவே மெய்ப்பொருள். அந்த உணர்வைத் தப்பாமல் தன்னுள் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறாவிட்டால், அவன் படித்த கல்வி வாயளவில் சொல்லிக்கொள்ளலாமேதவிர அவன் கற்ற கல்வியினால் பயன் இல்லை .
அது மட்டுமல்ல, கணவனோடு கூடி முழு இன்பம் அனுபவிக்காத பெண் போல குறை உள்ளவனாகவே இருப்பான்.
இதனையே திருவள்ளுவரும் மெய் உணர்தல் அதிகாரத்தில்,
காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய் / குறள் : 360.
(நோய்: துன்பம்)
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் முப்பது வயதிற்குள் விட்டு விடவேண்டிய மூன்றையும்; பெற வேண்டிய ஒன்றையும் அறிகிறோம்.

*** *************************************************************************************************
பாடல்:40
தேவர் குறளும்; திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும்; முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்.
************
மனிதர்களே.
வள்ளுவத் தேவனாரின் திருக்குறளும்
சிறப்புடைய நான்கு வேதங்களின் இறுதிப்பொருளும்
அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவர் தேவாரத் தமிழும்
பதஞ்சலியார் அருளிய யோக சூத்திரமாகிய மொழியும்
மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையும் திருவாசகமும்
திருமூலர் திருமந்திரமும்
ஒரே கருத்துடையவை என்று உணர்க.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக உய்வைத் தரும் ஆறு நூல்களை அறிகிறோம்.

*** ******************************

No comments:
Post a Comment