எறும்புகளால் குயில்கள் துன்பம் உறுமா
சரம் சரமாய் சுள்ளெறும்புகளாட்டம்
கடிக்க ஆரம்பித்த கேள்விகள்
வழிப்பாதைகளை
தானாகவே துலக்குகிற மாதிரியான எறும்புகள்
இரவிலும் ஊர்ந்து கொண்டுதான் உள்ளன
எவர் நோக்கி? எப்பாதை நோக்கி?
இரவில் நடமாடும் அவை என் காலடியால்
சற்று நிதானிக்கா விட்டால்
கடிதரும் எறும்புகள் இறந்திருக்கும்
நடுநிசியில் ஏதோ ஒரு நொணாப் பூ வாசம் நாசியில் ஏற
கடிக்கக் கொடுத்த இடங்கள் வீங்குகின்றன
இப்போதும் ஒரு ஞான வரைபடம்
குயிலின் நெஞ்சுக்குள்ளே அழுகியபடி இருக்கிறது
வெக்கையில் குரலிழந்த குயில்
இரவு மெலிதாகும் வரை கதறிக் கூவுகிறதா
கூவிக்கதறுகிறதா தெரியவில்லை.
***
No comments:
Post a Comment