நான் ஒளவை பேசுகிறேன் (7) 7.12.25
நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.
ஏ மனிதர்களே ! இன்று நான் ஒரு ஊரின் குளத்தில் நீராடியபோது அங்கே உள்ள அல்லி மலர்களின் ( ஆம்பல்) உயரம் தெரிந்தது. உண்மையில் நீரின் உயர அளவுமட்டம் எவ்வளவோ அந்த உயரம் தான் அல்லிபூவின் உயரம். மனிதர்களின் நுண் அறிவு அவர்கள் படித்த/கற்ற நூல்களின் அளவில்தான் இருக்கும்.
மனிதர்கள் பணம் பணம் என்று 24 மணிநேரமும் ஓடுகிறார்கள். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின்/தவத்தின் அளவிலேயே ஒருவனது இப்பிறப்பு செல்வ நிலை.
இன்னொன்றும் சொல்கிறேன். பிறந்த குடும்பத்தின் பெருமை அளவிலேயே ஒருவனது பண்பு நலன்கள் அமைகின்றன.
***
No comments:
Post a Comment