நான் ஒளவை பேசுகிறேன் (6) 6.12.25
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவாரோ - கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோதான்.
ஏ மனிதர்களே!
நான் ஒரு கல்தூணைப் பார்த்தேன். அது பிளந்து வெடித்து கீழே விழுந்திருந்தது. அதிகமான பாரத்தை ஏற்றி இருக்கிறார்கள். அந்த பாரமான நேரத்தில் தனது தளர்வை அது சொல்லவில்லை. வளைந்துகொடுக்கவும் இல்லை. எனக்கு உடனே சில தன்மை உள்ள மனிதர்களின் குணம் நினைவு வந்தது. ஆம்,அவர்கள் இந்தக் கல்தூண் போன்றவர்களே.
அவர்கள் செய்திதாளில் 14 ஆம் பக்கத்தில் சிறிய பெட்டி செய்தியாக காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளால் உயிரிழக்கும் இராணுவ வீரர் (30) திருத்தணி ஒன்றியம் சேர்ந்த சக்திவேலாக இருந்தாலும் சரி;
குடும்ப மான அவமானம் தன்னுடையதாக எண்ணுகிற வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆனாலும் சரி;
அவர்கள் அவமானமுற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் ஆவர். தன்னை எதிர்க்கும் பகைவர்களுக்கும் துன்பங்களுக்கும் பணிந்துபோக மாட்டார்கள்.
***
No comments:
Post a Comment