அருணாசல அக்ஷர மண மாலையும் அபிராமி அந்தாதியும் (4)
பகவான் ரமணர் பாடல் : 3
அகம் புகுந்து ஈர்த்து உன் அகக் குகை சிறையாய்
அமர்வித்தது என் கொல் அருணாசலா
“ஈர்த்து என்னை ஆண்டுகொண்ட எந்தை பெருமானே” என்று சிவபுராணம் பகுதியில் மாணிக்கவாசகப் பெருமான் அருளினார். “ஈர்த்து” என்பது ஈர்க்கப்படும் பொருள் ஈர்க்கப்பட்டபின்னரே அறியும் நிலை ஆகும். உலகியலில் இருந்து ஈர்க்கப்படல் சுட்டி அருளினார் பகவான்.
அபிராமி அந்தாதி பாடல் :55 ல் “மின் ஆயிரம் ஒரு வடிவாகி விளங்குகின்ற அன்னாள்” ஒரு மின்னலையே பார்க்க இயலாத நிலையில் ஆயிரம் மின்னல் என்கிற சோதியை காண இயலாத நிலையில் என்ன செய்ய இயலும்?
முகத்திலே கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் என்பது திருமந்திரம்.
புறக்கண்ணால் காண முடியாத அன்னையை அகக்கண்ணால் அன்னையை அறியலாம். மின்சாரம் கொண்டது மின்னல். மின்னல் கண்ணை ஈர்க்கும். கண்ணைப் பறித்தது என்பர். ஈரம் இருக்குமிடத்தில் மின்சாரம் எளிதாகப் பாயும். கருணை கொண்ட மனதில் அம்மையின் சாரம் பாயும்.
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment