நான் ஒளவை பேசுகிறேன் (4) 4.12.25
அட்டாலும் பால் சுவையில் குன்றாது; அள(வு) வளா
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
ஏ மனிதர்களே ! நட்பு பற்றி என்ன அறிந்துள்ளீர்கள்? பழகுபவர் எல்லோரும் நண்பர்களா? இல்லை. நான் கூறும் எடைக்கல் இதுதான்.
பாலை எவ்வளவுதான் காய்ச்சினாலும் சுண்டக் காய்ச்சினாலும் (அட்டாலும்)அதன் சுவை குறையாது. நல்ல நண்பர்களுடன் எவ்வளவு பிணக்கு வந்தாலும் அது சுவையாகவே கருதப்படும்.
நட்பில் இன்னொருவகை உண்டு. குறிப்பிட்ட நிலையோடு கலந்து பழகினாலும் (நட்டாலும்) உண்மையான நட்புத் தகுதி இல்லாதவர் நண்பர்களாக மாட்டார்கள்.அதாவது நாம் கலந்து பழகினாலும் பழகாதவர்களை விட்டு விடுங்கள்.
நட்பைத்தவிர நாம் பழக வேண்டியது ஒரு வகையினர் உண்டு. அவர்கள் யார்? மேன்மக்கள்! அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
சுட்டாலும் சங்கு சுடப்பட்டாலும் வெண் நிறமே கொள்வதுபோல , வறுமைக் காலத்தால் சுடப்பட்டாலும் தங்கள் உயர் குணத்தை கைவிடாமல் வாழ்வார்கள்.
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment