பாடல்:15
********************
சிவாய நமஎன்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
***************************
மனிதர்களே .
உங்களுடைய முன் வினையை நீங்கள் அறிய முடியாது. அதுவே உங்களை விரட்டுகிறது. இந்நிலையில் சிவனின் நாமம் ( ஐந்தெழுத்தாகிய) “சிவாயநம” என்பதை அகத்தில் சிந்திக்க செய்ய வேண்டிய செயலை செய்துகொண்டே நினைத்துக்கொண்டே இருப்பதனால் முன்வினையின் துன்பம் ஒரு நாளும் உங்களுக்கு இல்லையாகும். இது ஒரு உபாயம். வழி. தந்திரம். அதுவே அறிவுமாகும்.
அப்படி இல்லையென்றால் முன்வினையின் வழியே ( விதியே) உங்கள் மதியாகிவிடும்.
சிறுவயதில் இருள்பயம் அச்சம் காரணமாக மகாத்மா காந்தியடிகள் பயந்தபோது அவரை அழைத்துச் செல்லும் பணிப்பெண், “ராம ராம” என்று சொல்லச் சொன்னதாக சத்திய சோதனை நூலில் எழுதியுள்ளார்.
கடைசி மூச்சுவரை “ஹேராம்” வரையில் அவரது வாழ்வை அந்நாமம் காப்பாற்றியது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை , சிவாயநம எனும் ஐந்தெழுத்தின் மகிமை எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
No comments:
Post a Comment