பாடல்:14
**********************
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்து உண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.
மனிதர்களே
பிச்சை எடுக்கும் வாழ்க்கை நிலையில் ஒருவன் என்ன செய்கிறான்? பிச்சையெடுப்பதில் “மூத்த” நீண்ட நிலையை அடைகிறான். அதனை குடி வாழ்க்கை என்றும் சொல்கிறான்.
“பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை”யில் அவன் ஆற்றும் காரியம் என்ன? பிறர் இச்சை கொள்ளும்படி ( விரும்பும்) பல வார்த்தைகளைப் பேசுகிறான். வற்புறுத்தி ( இடித்து) வயிறு வளர்க்கிறான். உணவு உண்கிறான்.
சீச்சீ! என்ன ஒரு மோசமான நிலை! இப்படி வயிறு வளர்ப்பதற்கு பதிலாக மானம் அழியாமல்( பெருமை குறையாமல்) உயிரை விட்டு விடுதல் சிறந்தது என ஒளவை நான் கூறுவேன்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை , மானம் மிகு வாழ்வின் நிலை பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*********
No comments:
Post a Comment