சந்த்யாவந்தனம்: (14) 12.12.25/
****************************************
“காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்று சந்த்யாவந்தனத்தின் காலங்கள் ஒரு பழமொழியால் குறிப்பிடப்பட்டதன் விளக்கம் சுவாரசியமானது.
அதாவது சூரியன் கீழ்வானத்தில் உதிக்கும் வரை சந்தியாவந்தனம் செய்யப்ப்ட வேண்டும் என்பதே சூரியனைக் காணாமல் கொடுக்கும் வந்தனம் ஆகும்.
சூரியன் நண்பகலில் உச்சிக்கு நேராக இருக்கும் போது ( நமது நிழல் கோணாமல் ) இருக்கிறது. அது மாத்யாநிஹம் ஆகும். ( மதியம் செய்யப்படுவது)
மேற்குவானில் சூர்யன் மறையும் முன்பே தொடங்கி நஷத்திரங்கள் உதயம் ஆகும்வரையில் செய்ய வேண்டும் என்பது மாலையில் செய்யும் சந்தயாவந்தனம் ஆகும்.
இதுவே வேத விதி.
மனு தருமத்தில் இந்த கால நிர்ணயம் வரையறுக்கப்படவில்லை.
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment