பரிகாசத்துக்குரிய முட்டை
பிடி நழுவ எது மூலம் எனத் தெரியவில்லை
பிடி கொள்வதற்கும் காரணம் சரிவர இல்லை
ஒரு செடியாய் மாறினால்
சில மண் வெட்டிகளுக்கும்
ஒரு மரமாய் மாறி நின்றால்
கூர் அரிவாளுக்கும் பலியாகும் நிலை என்பதால்
ஒரு பறவையாய் மாற எத்தனிக்கும் கணத்தில்
எனது பெருவிருப்பத்தின் முட்டையை
ஒரு மின்மினி உடைத்ததெனில் யார் தான் நம்புவார்கள்
சத்தமில்லாத
அந்த உடைந்த கணத்தை
பறந்து கொண்டிருக்கும் எந்தப் பறவையும் அறியாது
இப்போது போலவே.
***
No comments:
Post a Comment