காபிக்கடை
காபி : 2
13.11.2025 வியாழன்.
கவிதைக்கு கிடைக்கும் மொழி மட்டுமல்ல அதன் சூழலும் தளமும் கூட மாறிக்கொண்டே வந்துள்ளது. கவிஞன் சுட்டும் தலைவி ஒருத்தி அகநானூறு பாடல்கள் ஒன்றில் தலைவன் தன்னை அடைந்து மனம் செய்துகொள்வானா என்ற ஏக்கமுடன் உள்ளாள்.அவளுக்கு தைரியமும் தலைவன் மீது நம்பிக்கையும் வருவதாக ஒரு சூழல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோழியே! நேற்றிக்கு நடந்த சிரிப்பதற்கு இடமான செய்தி ஒன்றைச் சொல்கிறேன் கேள் என்று ஆரம்பிக்கிறது அப்பாடல்.(அகநானூறு/கபிலர்/பாடல்:248/புலியூர்கேசிகன் உரை)
வேடர்கள் பன்றி வேட்டைக்குச் செல்கிறார்கள். வேட்டை நாய்கள் பன்றிகளை பயமுறுத்தின. தொங்கும் முலைகளைக் கொண்ட தனது பெண் பன்றியைக் குட்டிகளுடன் காப்பாற்ற ஆண்பன்றி அந்த வேட்டை நாயை எதிர்த்து விரட்டுகிறது. அதுமட்டுமல்ல, வேட்டைக்காரனுக்கும் அப்பன்றி தனது எதிர்ப்பைக் காட்டி தடுக்கிறது. வேடுவனும் கூர் அம்பை எய்யாமல் அகல்கிறான்.
இச்செய்தி என்ன குறிக்கிறது? பழி போடுவது வேட்டை நாய்கள் போன்ற மனிதர்களின் கூட்டம். அதனை எதிர்த்து விரட்டுகிறது உன் தலைவன் நாட்டுப் பன்றி. அதுமட்டுமல்ல, அம்பு எய்து துன்பம் தருவதற்கு வேடர்களும் வந்தாலும் நேருக்கு நேர் சமாளிக்கிறது தலைவன் நாட்டு ஆண் பன்றி.
நிகழும் எளிய சம்பவங்களில் வாழ்வுக்கான நம்பிக்கை பெறும் காட்சி ஒற்றுமை அக நானூறு இலக்கியத்தில மட்டுமல்ல இன்றைய புதுக்கவிதையிலும் காண முடிகிறது.
எல்லா நிகழ்விலும் நாட்டின் வளம் பேசப்பட்டது அன்றைய கவிதை மொழியில். இன்றைய கவிதை மொழியில் சுயம் இழப்பு; அடையாளம் இழப்பு சுட்டப்படுகிறது.
No comments:
Post a Comment