அன்னை கிராமம் நகரம்
உறவினர் நட்பினர் சொந்த பந்தம்
தொலை தூரம் மாமன் மச்சான்
அனைவரையும் இழந்து
பக்கென இதயம் நின்று
பேச முடியாத ஊமைத்தனம் ஆகி
சித்தம் பேதலித்தும் வெளியே காட்டாமல்
உள்ளே குமுறும் போது
அத்தனை பேரும் திரும்பக் கிடைக்கின்றனர்
மறந்த செல்போன் பத்து நிமிடம் தாமதித்து கிட்டும் போது.
No comments:
Post a Comment