இனி கவிதை எழுத மாட்டேன் என
ஒரு கவிதை எழுதி விட்டேன்
இனி அனுப்ப மாட்டேன் என்றே
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
படிக்க மாட்டேன் என்பவர்கள் படிப்பார்கள்
என்றோ எங்கோ எவர்க்கோ
இரு செவியில் விதையாகி ஒரு நொடியில் கனியாகி
நினைவில் கலந்து மணம் வீசும்
இனி என் கவிதை.
No comments:
Post a Comment