ஆசுகவி காளமேகப் புலவரே எப்படிக் கண்டீரோ !
தேங்காயும் சிவனும் ஒன்று என்றீர்
இருவரும் கல்லால் அடியுண்டீர் என்றீர்
இருவருக்கும் ஓடு உண்டு என்றீர்
இருவருக்கும் மூன்று கண் என்றீர்
இருவரும் பூஜைக்குப் பயனாவர் என்றீர்
எல்லாமும் சொன்னீர் புலவர்காள்
தேங்காய் விலை அதிகம் என்பது தவிர்த்து.
No comments:
Post a Comment