பாடல் : 17
*****************
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
******************************
மனிதர்களே !
உங்களுக்கு எவர் உறவு என்று சொல்லுகிறேன் கேளுங்கள்.
குளத்தில் தளும்பத் தளும்ப நீர் இருந்தபோது எத்தனை எத்தனை கொக்குகள் பறந்து வந்து அமர்ந்தன! விளையாடி மீன்கள் உண்டன. குளித்தன. உடல் நனைந்து சில்லிட்டு நீந்தின!
அந்தக்குளத்துக்கு கோடையில் துன்பம் வருகிறது. கோடைக் காலம்.
வற்றிய குளத்தை விட்டு அறுத்துக்கொண்டு வேறு குளம் நோக்கிப் பறந்து விடுகின்றன நீர்ப்பறவைகள்.
ஆனால் இன்னொன்று கவனித்தீர்களா!
வற்றிய அதே குளத்தில் கொட்டிப் பூண்டும் ( கொட்டி) ஆம்பல் கொடியும் , நெய்தல் கொடியும் (நெய்தல்) குளத்திலேயே இருக்கின்றன.
அவையும் வாடுகின்றனவே குளத்தைக் கைவிட்டு வேறு இடம் போவதில்லை.
குளத்தின் துன்பத்தை அவையும் அனுபவிக்கின்றன.
வறுமை நிலையிலும் பிரியாமல் உறவுகள் அருகில் இருப்பதே உறவு.
ஒளவைப்பாட்டியின் மூதுரை உணர்வோம். சிந்திப்போம்.
No comments:
Post a Comment